Monday, February 20, 2017

வடபகுதியில்  1966களில் இருந்து 1970கள்​ வரை மாக்ஸிஸ்ட் லெனிஸ்ட்டுகளின் போராட்டங்களும் சாதனைகளும்!  
1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி “சாதிஅமைப்பு தகரட்டும்  சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற கோஷத்துடன் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து ஆரம்பமாகிய சட்டவிரோத ஊர்வலம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை தாண்டும் பொழுது வடபிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து திரட்டப்பட்ட பொலிசாரினால் கடுமையாக தாக்கப்பட்டது. கலகம் அடக்கும் பெரும் தொகையான பொலிசார் கொட்டன் பொல்லுகளுடனும், கண்ணீர புகைக்குண்டுகளுடன் தாக்குதல்களை மேற்க்கொண்டனர். கற்களாலும் கொடித்தடிகளாலும் ஊர்வலத்தினர் பொலிசரை திருப்பி தாக்கினர்.பொலிசார் பிரம்பு கேடயங்ளால் அவற்றை தடுத்து ஊர்வலத்தினரை சிதறடித்தனர். சிதறிய ஊர்வலத்தினர் மீண்டும் ஒன்று கூடி மௌன ஊர்வலமாக யாழள் கோட்டை மைதானத்தை அடைந்தனர். ஊர்வலத்துக்கு தலமை தாங்கிய தோழர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். யாழ் கோட்டை மைதானத்தை அடைந்த ஊர்வலத்தினர் அங்கு பொதுக் கூட்டத்தை நடத்தினர் அங்கு ரையாற்றிய      (புரட்சிகர) இலங்கை கம்யூன்னிஸ்ட   கட்சியின் பொதுச்செயலாளா தோழர் என்.சண்முகதாசன் இனிவரும் நாட்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தும்  ஒவ்வரு சொட்டு கணணீரும் ஒவ்வரு வெடிகுண்டாக மாறும் என்றார். அதுபோலே 1966ஒக்ரேபரில் இருந்து 1970 ஆம் ஆண்டு    வடபிரதேசம் எங்கும் வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டேயிருந்த்து. வடபகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதியினருடன் ஒரேவாங்கில் அமர்ந்து வாங்கில் அமர்ந்து ஒரேமேசையில் சமத்துவமாக உணவு அருந்தவும் உயர்சாதியினருக்கு தேனிர் வழங்கும். பேணியில், டம்லரில், கிளாசில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தேனீர் வழங்கும் உரிமையையும, சகல தேனீர்கடைகள், போசன சாலைகள்,​ ஹேட்டல்கள் சகலதிலும் வாழை இலைகளிலும் உயர்சாதியினருக்கு என வைத்திருக்கும் தட்டுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உணவு வழங்கும்படியும், தாழ்தப்பட்டவர்களுக்கென வைத்திருக்கும் கறல்பிடித்த பேணிகள், கறல்பிடித்த தட்டுகள்சகலதையும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனக்கோரி வடக்க்கிலுள்ள எல்லா போசன ச்லைகள், தேனீர் கடைகள், ஹேட்டல்கள் முன்பாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர். சில தேனீர் கடைகள், போசனசாலைகள், ஹேட்டல்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. அதேவேளை பல தேனீர்கடைகள், போசனசாலைகள், ஹேட்டல்கள் சமத்துவமாக திறந்துவிடப்படாது தேனீர்டை பிரவேசம் செய்தவர்களை தாக்கி விரட்டினர்
1967இல் இவ்வாறான தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் சங்கனையில் வலுடைந்த்து. இரு பகுதியினரும் மிகமோசமாக மோதிக்கொண்டனர். இம்மோதல் சங்கானை கிராமங்களுக்கும் பரவியது. இம் மோதல் சங்கனை சந்தையடி, புளியடி, நிச்சாமம், சண்டிலிப்பாய், சுளிபுரம், போன்ற ஊர்களுக்கும் பரவியது. இதனால் சங்கனையும் அதனை அண்டிய பிரதேசங்களும் ஒரு யுத்தபூமியாக மாறியது. 1967 ஒக்ரடாபர் மாதம் 21ஆம் திகதி இப்போராட்டத்தை விரிவுபடுத்த கட்சியின் தலைமையில் ஒரு வெகுஜன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதுதான் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம். அதன் தலைமையில் தேனீர்கடை திறப்பு போராட்டமும், புகழ்பெற்ற மாவுட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றிதலைச்சி அம்மன் கோவில் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும், தாழ்த்தப்பட்ட மக்களும், முற்போக்காளர்களும் பெருமளவில் பங்குபற்றினர். இப்போராட்டம் வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, அச்சுவேலி, கோப்பாய், இருபாலை, என விரிவுபடுத்தப்பட்டது. அதேபோல் சாவகச்சேரி, கொடிகாமம், பளை, கைதடி போன்ற பட்டணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது பல பட்டணங்களில் சமாதானமாக தேனீர்கடைகள் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. நெல்லியடி, அச்சுவேலி, சங்கனை, ஆகிய இடங்களில் பிற்போக்குவாதிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள். இதில் மோசமான எதிர்தாக்குதல்களும், போராட்டங்களும் சங்கானையில் உள்ள நிச்சாம்ம் என்ற கிராமத்தை சுற்றி நடந்துவந்தது. அதுபற்றி யூ.என்.பி ஆட்சியில் பாராளுமன்றத்திலும் விவாதங்கள் இடம் பெற்றது. இதுபற்றி மறைந்த கம்பஹா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழரசுக் கட்சி எம்.பி.மார்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்க்கு மறைந்த வட்டுக்கோட்டை முன்னாள் எம்.பி.அமிர்தலிங்கம் அவர்கள் பதிலளிக்கயில் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கு சங்கானையில் ஒரு சங்காயை (சீனநகரம்) உருவாக்க முயலுகிறார்கள் எனக்கூறி தமிழரசுக் கட்சியின் பிற்போக்கு தனத்தையும், சாதிவெறியர்களுக்கான ஆதரவையும் வெளிக்காட்டினார். சங்கானை பிரதேச தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் இருபகுதியினரும் விவசாயம்,     தோட்டங்கள் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இப்பொழுது கண்ணிவெடிகள் போன்று, அன்று நாட்டு வெடிகள் புதைக்கப்பட்டிருந்த்து. அதனால் யாருமே தோட்டங்களோ, விவசாயமோ செய்யமுடியாமல் போனது.
பொது கோவில்களில் உயர்சாதி உட்சென்று கும்பிடுகின்ற தூரம்வரை தாழ்த்தப்பட்ட தமிழ மக்கள் உட்சென்று கடவுளை கும்பிட அனுமதி வளங்கப்படவில்லை. தாழ்தப்பட்ட  தமிழ் மக்கள் கோவலின் வெளியே நின்றுதான் கடவுளை கும்பிடமுடியும். இது அநீதியானது. இதை எதிர்த்து திண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம். பெரிய கோவிலான மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றிதலைச்சி அம்மன்கோவில் ஆகியவைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் உட்சென்று கடவுளை கும்பிட அனுமதிக்கும்படி கோவில் நிர்வாகத்திடம் வேண்டுகோள்விடுத்தனர். அதற்க்கு அவர்கள் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தனர். அதை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தினர் ஆலய பிரவேசம் செய்தனர். ஆலய நிர்வாகம் கோவிலை பூட்டியது. உற்சவ காலத்தில் மட்டும் பொலிஸ் பாதுகாப்புடன்​ கோவிலை திறந்து திருவிழவை நடத்தினார்கள். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைமையில் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்கள் மீண்டும் கோவில் பிரவேசம் செய்தார்கள்.கோவில் நிர்வாகம் பொலிசாரின் உதவியுடன் தடுத்து ந்நிறுத்தியது. இவ்வாறு மூன்று வருடங்கள் நடந்த்து. 3வது வருடம் நடைபெற்ற திருவிழாவின்போது பொலிஸ் தடையையும்மீறி தாழ்த்தப்பட்ட தமிழ்மக்கள் உட்செல்ல முயன்றார்கள் இதனால் கலவரம் மூண்டது, பொலிசார் கண்ணீர்புகை பிரயோகம் செய்தனர் துப்பாக்கி சூடும் இடம்பெற்றது, வெடிகுண்டுகளும்வெடித்த்து. பலர்காயப்பட்டனர். தீண்டாமை ஒழிப்பு வெகுஜனஇயக்கத்தின் பிரதேசத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்கள்மேல் வளக்கு தொடரப்பட்டது. இவ்வாறான போராட்டங்களின் மூலம்தான் இரண்டு கோவில்களும் சமத்துவமாக திறக்கப்பட்டது.
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் தமிழரசுக் கட்சித் தலைவர் காலம்சென்ற எஸ.ஜே.வி.செல்வநாயகத்தின் தொகுதிக்குள் அடங்கிய கோவிலாகும். அவர் முயற்சி செய்திருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அக்கோவிலை மோதல் இல்லாமல்​ சமத்துவமாக திறந்துவிட செய்திருக்க முடியும். ஆனால் எஸ.ஜே.வி.செல்வநாயகம் இவ்விடயத்தில் ஒரு வார்தைகூட வியிடவில்லை  இது போன்றே  சாவகச்சேரி தொகதியில்தான் மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன்கோவில் இருக்கிறதி அப்போது சாவகச்சேரி தொகுதியின் பாராளுமன்றஉறுப்பினராக இருந்தவர் காலமசென்ற நவரட்ணம் ஆகும் இவர் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகும் மட்டுவில். பன்றிதலைச்சி அம்மன்கோவில் போராட்டம் நடக்கும்போது அதில் தலையிட்டு சமாதானமாக தீர்த்தவைக்க முன்வராமல் ஒதுங்கியிருந்து கொண்டார். இதில் இருந்து விளங்கிக் கொள்ளக்கூடியதுதான். இவரகளும் இவர்களது கட்சியும் இவரகளது கொள்கையும் தமிழ்மக்கள் மத்தியில்உள்ள பிரபுத்துவ எண்ணங் கொண்ட முதலாளித்துவ வாதிகளினதும் சாதிவெறியர்களிகன் ஆதிக்கத்துக்கான போராட்மேயொழிய சாதாரண மற்றும் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களினதும் விடுதலைக்கான போராட்டமல்ல என்பதேயாகும். இந்தக் கொள்கையின் தொடர்ச்சிதான புலிகளினதும் தற்போதைய தமிழ் தேசியகூட்டமைப்பினதும் கொள்கையாகும்.
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றிதலைச்சி அம்மன் ஆகிய இரண்டும் சமத்துவமாக தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களுக்கு திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து தொண்டமனாறு செல்வச்சந்நிதி கோவில், வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவில், போன்ற பிரசித்திபெற்ற கோவில்கள் சகலதும் சமாதானமாக திறந்துவிடப்பட்டன. அன்று முதல் வடபகுதியின் சகலகோவில்களும் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களுக்கு திறந்துவிடப்பட்டன.
மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக சங்கனை பிரதேச மக்கள் குறிப்பாக நிச்சியாம மக்கள் சாதிவெறியர்களினதும் பிற்போக்காளர்களினதும் சுற்றிவளைப்புக்குள் இருந்தும் விட்டுக்கொடுக்காத போராட்டத்தினுடாக தேனீர்கடைகளில் சமத்துவ உரிமையைவென்றெடுத்தனர், அத்தோடு சிலதோட்ட நிலங்களின் உரிமையையும், குத்தகை உரிமையையும், கூலி உயர்வுகளையும் வென்றெடுத்தனர் சமகாலத்தலேயே அச்சுவேலி, நெல்லியடியிலும் தேனீர்கடை போராட்டம் வெற்றிபெற்றது. அச்சு​வேலி பகுதியின் பிரதான சாதிவெறியர்கள் சிலரின் கொட்டங்கள் அடக்கப்பட்டதும் அச்சுவேலி தேனீர்கடைகள் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. நெல்லியடி தேனீர்கடைகள் அருகில்இருந்த கன்பொல்லை மக்களின் விட்டுக்கொடுக்காத தொடர்ச்சியான​ போராட்டத்தாலும், சாதிவெறியர்கள் அடக்கப்பட்டதாலஞும், அப்பகிதியில் இருந்த புரட்சிகர கம்யூனிஸட் கட்சியின் ஸ்தபனபலத்தினாலும் தேனீர்கடைகள் சகலதும் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. இப்போராட்டத்தில் போராளிகள் 12பேர் தியாகிகளானார்கள் எதிரிகள்தரப்பில் 13பேர்கொல்லப்பட்டார்கள்.
மெத்த்த்தில் 1966ஆம் ஆண்டு ஒக்டோபரில் இருந்து 1970வரை புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தாழ்த்தப்பட்ட தமிழ்மக்ளையும் முற்போக்காளர்ளையும் திரட்டி நான்கு ஆண்டுகள் நடாத்திய தொடர்ச்சியான போராட்டங்களினுடாக சகல ​கோவில்களிலும், சகல தேனீர்டைகளிலும், சகல போசனசாலைகளிலும், சகல​ ஹோடல்களிலும் அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உயர்சாதி தமிழ்மக்களுக்கு உள்ள அதேயளவு உரிமையை பெற்றுக்கொடுத்தது. இந்த வெற்றிக்குரிய புகழ் புரடசிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் வாலிபர் சம்மேளனத்துக்கும், தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்கும் உரியதாகும். இப்பேராட்டத்துக்கு பலதுறையை சேர்ந்தவர்களும் த்த்தமது பங்களிப்பை செய்துள்ளார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், நாடக எழுத்தாளர்கள், நாடக கலைஞர்கள், என பல்துறையை​ சேர்ந்தவர்களும் தத்தமது பங்களிப்பை வளங்கியுள்ளனர். நிச்சாம்ம் மக்களைப்பற்றி பாடும்போது ஒரு கவிஞன் “எச்சாமம் எதிரி நுளைந்தாலும் நிச்சாமக் கண்கள்​ நெருப்பெறிந்து நீறாக்கும் என்றான். மற்றொரு கவிஞன் பாடுகையில் “ஆற்றல்மிகு கரத்தில் ஆயுதங்கள் ஏந்துவதே மாற்றத்துக்கான வழி மாற்று வழி ஏதும்மில்லை எனப்காடினான் அக்காலத்தில் தோழர் டானியல் அவர்களின் புகழ்மிக்க நாவலான “பஞ்சமர்நாவல் வெளிவந்தது. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலை பற்றிய புகள்பெற்ற நாடகமான “கந்தன் கருணை நாடு பூராவும்​ மேடையேறி மக்களின் அமோக ஆதரவை பெற்றது. இது போன்ற பல அந்புதங்கள் நாட்டில் நிகழ்ந்தது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவ உரிமையை பெற்றுக்கொடுத்த்துடன் புரட்சிகர இலஙகை கம்யூனிஸ்ட் கட்சி தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. சர்வதேச புரட்சிகர விடுதலை இயக்,கங்களுக்கு தனது ஆதரவையும்  வெளிப்படுத்தியுள்ளது. வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தனது ஆதரவு தெரிவித்து 1967ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலங்கை ஸ்தானிகரின் யாழ் விஜயத்தை எதிர்த்து, யாழ் நூல்நிலையத்தில் அமெரிக்க நூலகப்பிரிவு ஒன்றை திறந்துவைக்கவந்த வேளை,அவருக்கு எதிராக கூழ்முட்டை வீச்சு போராட்டத்தை நடத்தியது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, இஸ்ரேலுக்கு எதிராக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி இயக்கங்கள், மற்றும் துண்டுபரசரங்கள் பல வெளியிட்டும் முறபோக்காளர்களின் அதரவை தெரிவித்த்து.
1969 ஆம் ஆண்டு மே தினத்தன்று மேதினகொண்டாடுவதை யூ.என்.பி அரசு தடைசெய்த்து. அந்த தடையை ஏற்றுக்கொள்ளாத புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கொழும்பிலும், யாழ்பாணத்திலும் தடையைமீறி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தியது. யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் தடையை மீறிய ஆர்ப்பாட்ட ஊர்வலமாக நடைபெற்றது.பொலிசாரும் ஊர்வலத்தினரும் மோதலில் ஈடுபட்டனர். பலர் பொலிஸ் தாக்குதலில் காயமடைந்தனர். ஊர்வலத்துக்கு தலைமைதாங்கிய தோழர்கள் ஆஸ்பத்திரியில் பொலிஸ் காவலுடன் வைத்தியம் செய்யப்பட்டு பின்பு அவர்கள் நீதி மன்றில் நிறுத்தப்பட்டனர். அக்காலத்தில் பல நூறு கூட்டங்களை நடத்திய பாராளுமன்றத்திற்கு உண்மையான அதிகாரம் இல்லை. உண்மையான அதிகாரம் ஆயுதப்படை, பொலிஸ்டை, விமானப்டை, கடற்படை, நீதிமன்றம், சிறைச்சாலைகள், உயர் அரச உத்தியோகத்தர்கள் இவர்களிமே உணமையான அதிகாரம் உள்ளது. இவற்றை அடித்து நொருக்கி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஐனநாயக அரசு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும் என்ற மாக்ஸ், லெனினஸ வகுப்புகளை கூறினோம்.
கே.கே.எஸ் சீமேந்து தொழிற்சாலை, பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் ஓட்டு தொழிற்சாலை, மில்க்வைற் சோப் தொழிற்சாலை, சுருட்டு தொழிற்சாலைகள், ஆர்.வி.ஜி பீடிகம்பனி, யாழ்ப்பாணம் மாநகரசபை தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் சார்பில் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது, சம்பள உயர்வு, தொழிலாளர்களின் லீவு விவகாரம், வேலை நேரம், தொடர்பான தொழிற்சங்க போராட்டங்களையும், தொழில் வழக்குகளையும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமே தலைமை கொடுத்து உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்து. அதேவேளை தமிழரசுக் கட்சி தொழிற்சாலை நிர்வாகத்துக்காகவும், முதலாளிகளுக்காகவும் செயல்பட்டதுடன் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் தொழிற்சாலை நிர்வாகத்திற்காகவும், முதலாளிமார்களுக்காகவும தொழில் கோடுகளில் வாதிட்டார். தொழிலாளர்களின் சார்பில் புரட்சிகர கம்யூனிஸட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சண்முகதாசன் தொழிலாளர்களுக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். இவ்வாறான போராட்டங்களின் போது தமிழரசுக் கட்சியும், அவர்களின் சட்டத்தரணிகளும் வர்க்க அடிப்படையில். தமிழ் முதலாளிகளையும், கூட்டுத்தாபன நிர்வாகிக்ளுக்காகவுமே பாதுகாப்பதற்காகவே செயல்பட்டார்கள். தென்னிலங்கையில் 1966களுக்கும் 1970களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிடக்கூடிய பாட்டாளிவர்க்க போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. 1966இல் ட்ட்லி – செல்வா ஒப்பந்த்த்துக்கதிராக (அவ்ஒப்பந்தம் தமிழருக்கு மாவட்ட சபையை வளங்கவிருந்த்து) சிறிலங்கா சுதந்திரக் கட்சி கெனமன் கட்சி, சமசமாஜக் கட்சி மசாலவடே அப்பிட்ட ஏப்பா என்ற ஊர்வலத்தை நடாத்தி நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். அவர்களின் போராட்டத்தால் ட்ட்லி – செல்வா ஒப்பந்த்த்தை அரசு கிழித்தெறிந்த்து. அவ்ஊர்வலத்தில் ஜே.வி.பி தலைவர் றோகண விஜயவீர கலந்துகொண்டார். அதுசம்மந்தமாக புரட்சிகர கட்சி அவிடம் வினா எழுப்பியது. அதற்கு அவர் பதில்ஏதும் கூறாமல், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் அதன் வாலிப சம்மேளனத்திலிருந்தும் வெளியேறி ஜனதா விமுக்தி பெரமுன என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். 1971இல் ஜே.வி.பி ஆயுதக் கிளாச்சி ஒன்றை நடாத்தி அதில் தோல்வி கண்டார். அப்புரட்சி அடக்கப்படும்போது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் கைதுசெய்ப்பட்டு,  அக்கட்சியும் அடக்கப்பட்டு சிதைக்கப்பட்டது. சிறிதுகாலத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வளர்ச்சிடைந்த்து. அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளிக் கெதிராகவும், தமிழ் கடசிகளின் சிங்கள மக்களுக்கெதிரான கொள்கைகளை எதிர்த்தும் பொதுக் கூட்டங்ளையும், ஊர்வலங்களையும், சுவரெட்டிகளையும், பத்திரிகை அறிக்கைகளையும், நேரடி விவாதங்களையும், துண்டுபிரசுரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு தேசிய கடைமையை கட்சி செய்துவந்த்து.

இவ்வாறாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் அன்றும் இன்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மத்தியிலான ஐக்கியத்துக்காகவும், தேசியப்பிரச்சினையை  தீர்ப்பதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பிரதேச சுயாட்சி அதிகாரம் வழங்கும்படியும் அன்று கோரியது. இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கோரும் மாகாண சபைக்கு மட்டுப்படுத்தப்பட்ட காணி மற்றும் பொலுஸ் அதிகாரம் வழங்குவதன் மூலம் ஏற்பட்டிரிக்கும் இனக்குரோதங்களை படிப்படியாக இல்லாதொழிக்க முடியும். தேசியபாதுகாப்பு அதிகாரங்ள், முபடபடைகளின் அதிகாரங்கள் முழுவதும் மத்தியஅரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் வடக்கு, கிழக்குக்கு வழங்கப்படும் காணி, பொலிஸ்.அதிகாரங்கள்  மத்திக்கு கட்டுப்பட்டதாகவே இருக்கும், எனவே இந்தவிடயத்தில் தயக்கம ​காட்டத் தேவையில்லை. இனவாதசக்திகளுக்கு அடிபணிந்து போகாது, தமிழ்மக்களுக்கு வளங்க வேண்டிய உரிமைகளை சிங்களமக்கள் வழங்க வேண்டும் என்ற உண்மையை அரசு சிங்கள மக்களுக்கு தெழிவுபடுத்துவதன் மூலம் சிங்களமக்களின் ஆதரவை பெற்று இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்பது எமது நம்பிக்கை. 

4 comments:

aaradhana said...

இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்பது எமது நம்பிக்கை.
https://www.youtube.com/edit?o=U&video_id=YwAkzZ3GMGo

aaradhana said...

அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=44JiJPaFwEM

aaradhana said...

SUPER POST
https://www.youtube.com/edit?o=U&video_id=-hTp5MoD1JY

aaradhana said...

excellent post
https://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I

Post a Comment

Search This Blog