Monday, December 25, 2017

“ஆங்கோர்ஏழைக்கு எழுத்தறிவித்தல் அன்னசத்திரம் ஆயிரம்கட்டல் ஆலயம்பதினாயிரம் நாட்டல் இன்னுமாயிரம் புண்ணியம்கோடி
தமிழ் மக்கள்மீதாக வலிந்து திணிக்கப்பட்ட கொடூர யுத்தம்  உருவாக்கிய வறுமையில​வாடும் ஏழைஎழிய தமிழ்  மாணவசெல்வங்ளின் கல்வி மேம்பாட்டுக்காக தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தை புனரமைப்போம்!







1957இல் தமிழ் மாணவர்களின்  உயர்கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட  தமிழ் பல்கலைக்கழக இயக்கம்  நிர்வாகிகளின் பொறுப்பற்ற  சுயநல போக்கால் இலக்கு தவறி பயணித்து வங்க​றோத்து நிலையில் மூடுவிழவை எதிர்நோக்கியது. இந்த சந்தர்ப்பத்தில் சமூகப்பற்றுள்ள துடிப்பான இளம் உறுப்பினாகளின் பெருமுயற்சியால் தெரிவுசெய்யப்பட்ட  மூத்த சட்டத்தரணி அமரர் மா.கனகரத்தினம் (மாணிக்ஸ்) தலைமையிலான புதிய நிர்வாகம் த.ப.க.இயக்கத்திற்கு சொந்தமானதும் திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ளதுமான 83 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படாமல் முடஙகிக்கிடந்த கமத்தொழில் கால்நடை செயல்முறை பயிற்சி நிலையத்தை புனரமைத்து இயங்கவைக்கும் பாரிய பணியை சட்டத்தரணி எல்.ஏ.ரி.வில்லியம்சிடம் ஒப்டைத்தது (மேலதிக விபரங்ளை அறிந்துகொள்ள த.ப.க.இயக்கத்தின் வரலாற்று சுருக்கத்தை    வெளிப்படுத்தும் “மறைக்கப்பட்ட உணமைகள்என்ற கைநூலை வாசிக்கவும்) அமரர் மா.கனரெத்தினம் தலமையிலான நிர்வாகிகள் சொந்த வேலைகள் காரணமாக நிர்வாக பதவிகளில் தொடர முடியாத காரணியாலும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கிலும் புதியவர்ளை தெரிவுசெய்யும்படி பொதுச்சபை உறுப்பினர்ளை கேட்டுக் கொண்டதற்க்கு அமைவாக ஏற்பட்ட நிர்வாக மாற்றம், எஸ்.ஏ.டேவிட்டின்​  அறிவுறுத்தலுக்கு இணங்க செயற்பட்பட்டதனால் உருவான நடைமுறை சிக்கல்களால் த.ப.க.இயக்கத்தின் பயிற்சி நிலைய பணிப்பாளர் பதவியில் இருந்தும் ஏனைய பொறுப்புகளில் இர்ருந்தும் எல்.ஏ.ரி.வில்லியம்ஸ் விலகிக்கொண்டார். அதையடுத்து  புதிய பணிப்பாளராக  பொறுப​பேற்ற  சொலமன் அருளானந்தம் .டேவிற் தலைமையில் ​ இடம்பெற்ற நிகழ்வுகளால் உப்புவெளி பயிற்ச்சி நிலையம். அதலபாதாளத்துக்கு தள்ளப்பட்டது.. இநத  சூழலையும், யுத்தநெருக்கடிளையும பயன்படுத்தி த.ப.க.இயக்கத்தின் ஏழு உஷப்பினர்ளை கொண்ட தர்மகர்த்தாக்க​ள் வரிசையில் கடைசி இடத்தை வகித்தவரான நா.கிறிஷ்ணதாசன் மற்றும் 1989 பொது தேர்தலில் விரல்விட்டு  எண்ணக்கூடிய வாக்குகளைப் பெற்று ஈ.பி.டிபி சார்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற.உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட மு..சந்திரகுமாருடனும் திருகோணலையில்  உயர்பதவிகள் வகித்த சில ஊளல், மோசடி பெருச்சாளிகளும் கூட்டு சேர்ந்து த.ப.க.இயக்த்துக்கு சொந்தமான பல கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியுள்ள அசையும் அசையா( கிட்டத்தட்ட  (86 ஏக்கர் நிலங்கள் உப்புவெளியில் 86ஏக்கர்கள் நகரத்தின் உள்துறைமுகவீதியில் 05ஏக்கருமக                மொத்தம் 91ஏக்கர்கள் அடங்கலாக) சொத்துக்ளை மோசடியாக கையாடலுக்கு  இலக்காக்கியுள்ளனர் தற்போதைய நிலவரப்படி மேல்கூறப்பட்டுள்ள தீயசக்திகள் தமிழர் வரலாற்றில் தமிழ் மக்கள் தங்களிடத்தில் தாமே கொண்டிருந்த நம்பிக்கையை பறைசாற்றும் அடையளச் சின்னமான த.ப.க.இயக்கத்துக்கு  சொந்தமான 96 ஏக்கர் நிலத்தில் மோசடியாக விற்னை செய்த்துடன் நூறுவருட குத்கை என்றபோர்வையில்  அபகரித்ததும்போக எஞ்சியவற்றையும் தமது சொந்த சொத்ததாக மாற்றிக்கொள்ளும் நோக்கில் இந்த   சொத்துகளுக்கு உரித்தான தமிழ் பல்கலைக்கழக இயக்கம்  என்னும் இயற் பெயரையே   நடைமுறையில் இல்லாமல் செய்யும் செயற்பாடுகளிலும் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர முப்பது வருடகால யுத்த்த்தின் கொடுமைக்கு இலக்காகி நிர்க்திக்குள்ளாகியுள்ள தமிழ் சமூகத்தினற்கு உரித்தான பொதுசொத்து  அம்மக்கள் மத்தியில்,  பல்லாயிரக்கணக்கான ஏழைஎளிய மாணவ மாணவிகள் ஆரம்ப கல்வி முதற் கொண்டு பல்கலைக்கழக கல்வி மற்றும்தொழில்நுட்ப உயர்கல்வி வரையில் பொருளாதார  நெருக்கடிகளால் நெருங்கமுடியாமல் தவித்துக் ​கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்பதாக தமிழ் மாணவர்களின் உயர்கல்வி மேம்பாட்டுக்காக தமிழ் பல்லைக்கழகம் ஒன்றை நிறுவிட  மேற்கொண்ட முயற்சிக்கு, இலஙகைவாழ் தமிழ்மக்கள் ஒன்றணைந்து பெருந்தொகை பணத்தை நன்கொடையாக வாரிஇறைத்தும் திருக்கோணமலையை பூர்வீகமாக கொண்ட தமிழ்மக்கள் தமது சொந்த நிலங்களை திருகோணமலையில் தமிழர்களின் பாரம்பரிய உரிமையை வலியுறுத்தி  தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவிட ஏற்புடையதாக, ஆகக்குறைந்த விலையில் (ஏக்கர் ஒன்று ஆயிரம் ருபா விகிதம்) ஒருவகை தானமாக தியாகம் செய்தும் இருக்கிறார்கள். இந்த ​சொத்துக்கள் தமிழ் மாணவ,மணவிகளின் கல்வி மேம்பாட்டுக்கு பயன்பட வேண்டுமே தவிர  ஊளல்,  மோசடி பேர்வளிகளினதும், முன்னாள் ஆயுதக்குழுக்ளின் தலைவர்களதும் கஜானாக்களை நிரப்புவதற்க்காக ஒட்டுமொத்த  தமிழ் சமூகத்துக்கும் சவால்விடுத்து கையாடல் செய்வதை சுயமரியதையுள்ள எந்த தமிழனும் அனுமதிக்க மாட்டான்.,அனுமதிக்கவும் கூடாது குறிப்பாக த.ப.க.இயக்கத்துக்கு தமது சொந்த நிலங்களை ஒரு வகை தியாகமாக தானம் செய்த பெருந்தகைகளின் வாரிசுகள் இவ்விவகாரத்தில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு தமது முன்னோர்களின் தியாகத்தை ஏதோ ஒரு வகையில்    சொந்த சமூகந்தை  சேர்ந்த ஏழைஎளிய மாணவர்க்கு பயனளிக்கத்தக்கதாக மாற்றிட முன்வர வேண்டும்.
தற்போதைய ஜனநாயக சூழலில் கடந்தகால யுத்த கொடூரத்துக்குள் வலிந்து தள்ளப்பட்ட தமிழ் சமூகத்தின் மத்தியில் தகுதியிருந்தும் பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வியை நெருங்கமுடியாமல் ஏழ்மையின்பிடியில் சிக்குண்டு எங்கிதவிக்கும் நமது உறவுகளுக்கு த.ப.க   உதவிட புலமைபரிசில் திட்டமொன்றை ஏற்படுத்த வேண்டியது  காலத்தின் கட்டாயமாகும். இதவே த.ப.க.இயக்த்தின் முன்னாள் தலைவர் அமரர் மா.கனகரத்தினம் (மாணிக்ஸ்) அவர்களின் எதிர்பார்ப்பாகும் இந்த உயரிய தேவைக்காக புதிதாக நிதியங்ளை உருவாக்கி உண்டியல் குலுக்க வேண்டிய அவசியமிலை. ஏற்கெனவே  நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கும் த.ப.க.இயக்கத்தின் மூலம்  ஏழைஎளிய தமிழ் மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்கு பயனளிக்கத்தக்கதாக த.ப.க.இயக்கத்தின் தர்மசொத்துக்​களை பயன்படுத்தி நிரந்தர வருமானத்தை  பெற்று மேற்படி தேவையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.  இந்த திட்டமிடலுக்கு செயல்வடிவம் கொடுக்க ஏற்புடையதாகவும் தீயசக்திகளின் கையாடலுக்கு இலக்காகியுள்ள த.ப.க.இயக்கத்தின் அசையும் அசையா  சொத்துக்களை மீட்டெடுத்து அவற்றின் வருமானங்கள் நேரடியாக புலமைபரிசில் நிதியத்தை சென்றடைய ஏற்புடையதான நடவடிக்கைளை மேற்கொள்ள வசதியாகவும் ,த.ப.க.இயக்கத்துக்கு புத்துயிரூட்ட வசதியாக புதிய பொதுச்பை, புதிய தர்மாகர்தாக்கள் சபையை தெரிவுசெய்ய வேண்டியது உடனடி தேவையாக உள்ளது..தப.க..இயக்கத்தை புனரமைத்து  தமிழ் சமூகத்துக்கு பயனுள்ளதாக மாற்றிமைப்பதில் ஆர்வமுள்ளவர்களை பரந்துபட்டரீதியாக ஒன்றுதிரட்டி அங்கத்துவர்கள் சேர்க்கப்பட் வேண்டும்.  புதிய அங்கத்தவர்கள் மத்தியில் இருந்து புதிய நிர்வாகமும், தமிழ் சமூகத்தின் நம்பிக்க்க்கு உரிய ஏழு கனவான்களை தெரிவசெய்யப்பட்டு தர்மகர்த்தாக்கள் சபையும் நியமிக்கப்பட  வேண்டும். பேரழிவுக்குள்ளாகியிருக்கும் தமிழ் சமூகத்தில் நிர்கதிக்குள்ளாகியுள்ள மாணவ சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த பாரியபணியை சவாலாக ஏற்று செயல்பட தமிழ்மக்கள் மத்தியிலான இனப்பற்றாளர்களும், முற்போக்கு சக்திளையும்  பொதுமக்ளையும் ஒன்றணைந்து செயற்பட முன்வருமாறு அழைப்புவிடுக்கும அதேவேளை ​ தாயகம்வாழ் ஏழைஎளிய தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அக்றையும் அனுதாபமும்கொண்ட புலம்பெயர் உறவுளையும் எம்முடன் கைகோர்த்து செயலாற்ற முன்வருமாறு “த.ப.க.இக்கத்தின் மறுமலர்ச்சிக்கான அமைப்பு”  அறைகூவல் ​விடுக்கின்றது..தொடர்புகளுக்கு
 தொலைபேசி இல – 077- 6195785          12-11-2017
இத்துண்டுபிரசுரம்த.ப.க.இயக்கதின் புனரமைப்பை.வலியுறுத்தும் த.ப.க.இயக்கத்தின் மறுமலர்ச்சிக்கான அமைப்பு சார்பில் கோபாலபுரம், நிலாவெளியை சேர்ந்த பூ.சந்திரகுமாரன் ஆகிய என்னால்வெளியிடப்பட்டது.!                                                       
குறிப்பு – இத்துண்டு பிரசுரம்தொடர்பில் தஙகளது அபிப்பிராயத்தையும், நலைப்பாட்டையும், சநதேகங்ளையும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள கைதொலைபேசி  இலக்கத்துடன் தொட​ர்புகொண்டு தெரிவிக்கவும்.


உங்கள் அபிப்ராயங்ளையும் திருத்தங்கள், ஆலோசனைளையும் எதிர்பார்க்கினறோம்

Monday, February 20, 2017

வடபகுதியில்  1966களில் இருந்து 1970கள்​ வரை மாக்ஸிஸ்ட் லெனிஸ்ட்டுகளின் போராட்டங்களும் சாதனைகளும்!  
1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி “சாதிஅமைப்பு தகரட்டும்  சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற கோஷத்துடன் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து ஆரம்பமாகிய சட்டவிரோத ஊர்வலம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை தாண்டும் பொழுது வடபிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து திரட்டப்பட்ட பொலிசாரினால் கடுமையாக தாக்கப்பட்டது. கலகம் அடக்கும் பெரும் தொகையான பொலிசார் கொட்டன் பொல்லுகளுடனும், கண்ணீர புகைக்குண்டுகளுடன் தாக்குதல்களை மேற்க்கொண்டனர். கற்களாலும் கொடித்தடிகளாலும் ஊர்வலத்தினர் பொலிசரை திருப்பி தாக்கினர்.பொலிசார் பிரம்பு கேடயங்ளால் அவற்றை தடுத்து ஊர்வலத்தினரை சிதறடித்தனர். சிதறிய ஊர்வலத்தினர் மீண்டும் ஒன்று கூடி மௌன ஊர்வலமாக யாழள் கோட்டை மைதானத்தை அடைந்தனர். ஊர்வலத்துக்கு தலமை தாங்கிய தோழர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். யாழ் கோட்டை மைதானத்தை அடைந்த ஊர்வலத்தினர் அங்கு பொதுக் கூட்டத்தை நடத்தினர் அங்கு ரையாற்றிய      (புரட்சிகர) இலங்கை கம்யூன்னிஸ்ட   கட்சியின் பொதுச்செயலாளா தோழர் என்.சண்முகதாசன் இனிவரும் நாட்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தும்  ஒவ்வரு சொட்டு கணணீரும் ஒவ்வரு வெடிகுண்டாக மாறும் என்றார். அதுபோலே 1966ஒக்ரேபரில் இருந்து 1970 ஆம் ஆண்டு    வடபிரதேசம் எங்கும் வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டேயிருந்த்து. வடபகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதியினருடன் ஒரேவாங்கில் அமர்ந்து வாங்கில் அமர்ந்து ஒரேமேசையில் சமத்துவமாக உணவு அருந்தவும் உயர்சாதியினருக்கு தேனிர் வழங்கும். பேணியில், டம்லரில், கிளாசில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தேனீர் வழங்கும் உரிமையையும, சகல தேனீர்கடைகள், போசன சாலைகள்,​ ஹேட்டல்கள் சகலதிலும் வாழை இலைகளிலும் உயர்சாதியினருக்கு என வைத்திருக்கும் தட்டுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உணவு வழங்கும்படியும், தாழ்தப்பட்டவர்களுக்கென வைத்திருக்கும் கறல்பிடித்த பேணிகள், கறல்பிடித்த தட்டுகள்சகலதையும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனக்கோரி வடக்க்கிலுள்ள எல்லா போசன ச்லைகள், தேனீர் கடைகள், ஹேட்டல்கள் முன்பாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர். சில தேனீர் கடைகள், போசனசாலைகள், ஹேட்டல்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. அதேவேளை பல தேனீர்கடைகள், போசனசாலைகள், ஹேட்டல்கள் சமத்துவமாக திறந்துவிடப்படாது தேனீர்டை பிரவேசம் செய்தவர்களை தாக்கி விரட்டினர்
1967இல் இவ்வாறான தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் சங்கனையில் வலுடைந்த்து. இரு பகுதியினரும் மிகமோசமாக மோதிக்கொண்டனர். இம்மோதல் சங்கானை கிராமங்களுக்கும் பரவியது. இம் மோதல் சங்கனை சந்தையடி, புளியடி, நிச்சாமம், சண்டிலிப்பாய், சுளிபுரம், போன்ற ஊர்களுக்கும் பரவியது. இதனால் சங்கனையும் அதனை அண்டிய பிரதேசங்களும் ஒரு யுத்தபூமியாக மாறியது. 1967 ஒக்ரடாபர் மாதம் 21ஆம் திகதி இப்போராட்டத்தை விரிவுபடுத்த கட்சியின் தலைமையில் ஒரு வெகுஜன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதுதான் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம். அதன் தலைமையில் தேனீர்கடை திறப்பு போராட்டமும், புகழ்பெற்ற மாவுட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றிதலைச்சி அம்மன் கோவில் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும், தாழ்த்தப்பட்ட மக்களும், முற்போக்காளர்களும் பெருமளவில் பங்குபற்றினர். இப்போராட்டம் வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, அச்சுவேலி, கோப்பாய், இருபாலை, என விரிவுபடுத்தப்பட்டது. அதேபோல் சாவகச்சேரி, கொடிகாமம், பளை, கைதடி போன்ற பட்டணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது பல பட்டணங்களில் சமாதானமாக தேனீர்கடைகள் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. நெல்லியடி, அச்சுவேலி, சங்கனை, ஆகிய இடங்களில் பிற்போக்குவாதிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள். இதில் மோசமான எதிர்தாக்குதல்களும், போராட்டங்களும் சங்கானையில் உள்ள நிச்சாம்ம் என்ற கிராமத்தை சுற்றி நடந்துவந்தது. அதுபற்றி யூ.என்.பி ஆட்சியில் பாராளுமன்றத்திலும் விவாதங்கள் இடம் பெற்றது. இதுபற்றி மறைந்த கம்பஹா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழரசுக் கட்சி எம்.பி.மார்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்க்கு மறைந்த வட்டுக்கோட்டை முன்னாள் எம்.பி.அமிர்தலிங்கம் அவர்கள் பதிலளிக்கயில் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கு சங்கானையில் ஒரு சங்காயை (சீனநகரம்) உருவாக்க முயலுகிறார்கள் எனக்கூறி தமிழரசுக் கட்சியின் பிற்போக்கு தனத்தையும், சாதிவெறியர்களுக்கான ஆதரவையும் வெளிக்காட்டினார். சங்கானை பிரதேச தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் இருபகுதியினரும் விவசாயம்,     தோட்டங்கள் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இப்பொழுது கண்ணிவெடிகள் போன்று, அன்று நாட்டு வெடிகள் புதைக்கப்பட்டிருந்த்து. அதனால் யாருமே தோட்டங்களோ, விவசாயமோ செய்யமுடியாமல் போனது.
பொது கோவில்களில் உயர்சாதி உட்சென்று கும்பிடுகின்ற தூரம்வரை தாழ்த்தப்பட்ட தமிழ மக்கள் உட்சென்று கடவுளை கும்பிட அனுமதி வளங்கப்படவில்லை. தாழ்தப்பட்ட  தமிழ் மக்கள் கோவலின் வெளியே நின்றுதான் கடவுளை கும்பிடமுடியும். இது அநீதியானது. இதை எதிர்த்து திண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம். பெரிய கோவிலான மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றிதலைச்சி அம்மன்கோவில் ஆகியவைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் உட்சென்று கடவுளை கும்பிட அனுமதிக்கும்படி கோவில் நிர்வாகத்திடம் வேண்டுகோள்விடுத்தனர். அதற்க்கு அவர்கள் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தனர். அதை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தினர் ஆலய பிரவேசம் செய்தனர். ஆலய நிர்வாகம் கோவிலை பூட்டியது. உற்சவ காலத்தில் மட்டும் பொலிஸ் பாதுகாப்புடன்​ கோவிலை திறந்து திருவிழவை நடத்தினார்கள். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைமையில் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்கள் மீண்டும் கோவில் பிரவேசம் செய்தார்கள்.கோவில் நிர்வாகம் பொலிசாரின் உதவியுடன் தடுத்து ந்நிறுத்தியது. இவ்வாறு மூன்று வருடங்கள் நடந்த்து. 3வது வருடம் நடைபெற்ற திருவிழாவின்போது பொலிஸ் தடையையும்மீறி தாழ்த்தப்பட்ட தமிழ்மக்கள் உட்செல்ல முயன்றார்கள் இதனால் கலவரம் மூண்டது, பொலிசார் கண்ணீர்புகை பிரயோகம் செய்தனர் துப்பாக்கி சூடும் இடம்பெற்றது, வெடிகுண்டுகளும்வெடித்த்து. பலர்காயப்பட்டனர். தீண்டாமை ஒழிப்பு வெகுஜனஇயக்கத்தின் பிரதேசத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்கள்மேல் வளக்கு தொடரப்பட்டது. இவ்வாறான போராட்டங்களின் மூலம்தான் இரண்டு கோவில்களும் சமத்துவமாக திறக்கப்பட்டது.
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் தமிழரசுக் கட்சித் தலைவர் காலம்சென்ற எஸ.ஜே.வி.செல்வநாயகத்தின் தொகுதிக்குள் அடங்கிய கோவிலாகும். அவர் முயற்சி செய்திருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அக்கோவிலை மோதல் இல்லாமல்​ சமத்துவமாக திறந்துவிட செய்திருக்க முடியும். ஆனால் எஸ.ஜே.வி.செல்வநாயகம் இவ்விடயத்தில் ஒரு வார்தைகூட வியிடவில்லை  இது போன்றே  சாவகச்சேரி தொகதியில்தான் மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன்கோவில் இருக்கிறதி அப்போது சாவகச்சேரி தொகுதியின் பாராளுமன்றஉறுப்பினராக இருந்தவர் காலமசென்ற நவரட்ணம் ஆகும் இவர் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகும் மட்டுவில். பன்றிதலைச்சி அம்மன்கோவில் போராட்டம் நடக்கும்போது அதில் தலையிட்டு சமாதானமாக தீர்த்தவைக்க முன்வராமல் ஒதுங்கியிருந்து கொண்டார். இதில் இருந்து விளங்கிக் கொள்ளக்கூடியதுதான். இவரகளும் இவர்களது கட்சியும் இவரகளது கொள்கையும் தமிழ்மக்கள் மத்தியில்உள்ள பிரபுத்துவ எண்ணங் கொண்ட முதலாளித்துவ வாதிகளினதும் சாதிவெறியர்களிகன் ஆதிக்கத்துக்கான போராட்மேயொழிய சாதாரண மற்றும் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களினதும் விடுதலைக்கான போராட்டமல்ல என்பதேயாகும். இந்தக் கொள்கையின் தொடர்ச்சிதான புலிகளினதும் தற்போதைய தமிழ் தேசியகூட்டமைப்பினதும் கொள்கையாகும்.
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றிதலைச்சி அம்மன் ஆகிய இரண்டும் சமத்துவமாக தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களுக்கு திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து தொண்டமனாறு செல்வச்சந்நிதி கோவில், வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவில், போன்ற பிரசித்திபெற்ற கோவில்கள் சகலதும் சமாதானமாக திறந்துவிடப்பட்டன. அன்று முதல் வடபகுதியின் சகலகோவில்களும் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களுக்கு திறந்துவிடப்பட்டன.
மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக சங்கனை பிரதேச மக்கள் குறிப்பாக நிச்சியாம மக்கள் சாதிவெறியர்களினதும் பிற்போக்காளர்களினதும் சுற்றிவளைப்புக்குள் இருந்தும் விட்டுக்கொடுக்காத போராட்டத்தினுடாக தேனீர்கடைகளில் சமத்துவ உரிமையைவென்றெடுத்தனர், அத்தோடு சிலதோட்ட நிலங்களின் உரிமையையும், குத்தகை உரிமையையும், கூலி உயர்வுகளையும் வென்றெடுத்தனர் சமகாலத்தலேயே அச்சுவேலி, நெல்லியடியிலும் தேனீர்கடை போராட்டம் வெற்றிபெற்றது. அச்சு​வேலி பகுதியின் பிரதான சாதிவெறியர்கள் சிலரின் கொட்டங்கள் அடக்கப்பட்டதும் அச்சுவேலி தேனீர்கடைகள் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. நெல்லியடி தேனீர்கடைகள் அருகில்இருந்த கன்பொல்லை மக்களின் விட்டுக்கொடுக்காத தொடர்ச்சியான​ போராட்டத்தாலும், சாதிவெறியர்கள் அடக்கப்பட்டதாலஞும், அப்பகிதியில் இருந்த புரட்சிகர கம்யூனிஸட் கட்சியின் ஸ்தபனபலத்தினாலும் தேனீர்கடைகள் சகலதும் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. இப்போராட்டத்தில் போராளிகள் 12பேர் தியாகிகளானார்கள் எதிரிகள்தரப்பில் 13பேர்கொல்லப்பட்டார்கள்.
மெத்த்த்தில் 1966ஆம் ஆண்டு ஒக்டோபரில் இருந்து 1970வரை புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தாழ்த்தப்பட்ட தமிழ்மக்ளையும் முற்போக்காளர்ளையும் திரட்டி நான்கு ஆண்டுகள் நடாத்திய தொடர்ச்சியான போராட்டங்களினுடாக சகல ​கோவில்களிலும், சகல தேனீர்டைகளிலும், சகல போசனசாலைகளிலும், சகல​ ஹோடல்களிலும் அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உயர்சாதி தமிழ்மக்களுக்கு உள்ள அதேயளவு உரிமையை பெற்றுக்கொடுத்தது. இந்த வெற்றிக்குரிய புகழ் புரடசிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் வாலிபர் சம்மேளனத்துக்கும், தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்கும் உரியதாகும். இப்பேராட்டத்துக்கு பலதுறையை சேர்ந்தவர்களும் த்த்தமது பங்களிப்பை செய்துள்ளார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், நாடக எழுத்தாளர்கள், நாடக கலைஞர்கள், என பல்துறையை​ சேர்ந்தவர்களும் தத்தமது பங்களிப்பை வளங்கியுள்ளனர். நிச்சாம்ம் மக்களைப்பற்றி பாடும்போது ஒரு கவிஞன் “எச்சாமம் எதிரி நுளைந்தாலும் நிச்சாமக் கண்கள்​ நெருப்பெறிந்து நீறாக்கும் என்றான். மற்றொரு கவிஞன் பாடுகையில் “ஆற்றல்மிகு கரத்தில் ஆயுதங்கள் ஏந்துவதே மாற்றத்துக்கான வழி மாற்று வழி ஏதும்மில்லை எனப்காடினான் அக்காலத்தில் தோழர் டானியல் அவர்களின் புகழ்மிக்க நாவலான “பஞ்சமர்நாவல் வெளிவந்தது. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலை பற்றிய புகள்பெற்ற நாடகமான “கந்தன் கருணை நாடு பூராவும்​ மேடையேறி மக்களின் அமோக ஆதரவை பெற்றது. இது போன்ற பல அந்புதங்கள் நாட்டில் நிகழ்ந்தது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவ உரிமையை பெற்றுக்கொடுத்த்துடன் புரட்சிகர இலஙகை கம்யூனிஸ்ட் கட்சி தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. சர்வதேச புரட்சிகர விடுதலை இயக்,கங்களுக்கு தனது ஆதரவையும்  வெளிப்படுத்தியுள்ளது. வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தனது ஆதரவு தெரிவித்து 1967ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலங்கை ஸ்தானிகரின் யாழ் விஜயத்தை எதிர்த்து, யாழ் நூல்நிலையத்தில் அமெரிக்க நூலகப்பிரிவு ஒன்றை திறந்துவைக்கவந்த வேளை,அவருக்கு எதிராக கூழ்முட்டை வீச்சு போராட்டத்தை நடத்தியது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, இஸ்ரேலுக்கு எதிராக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி இயக்கங்கள், மற்றும் துண்டுபரசரங்கள் பல வெளியிட்டும் முறபோக்காளர்களின் அதரவை தெரிவித்த்து.
1969 ஆம் ஆண்டு மே தினத்தன்று மேதினகொண்டாடுவதை யூ.என்.பி அரசு தடைசெய்த்து. அந்த தடையை ஏற்றுக்கொள்ளாத புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கொழும்பிலும், யாழ்பாணத்திலும் தடையைமீறி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தியது. யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் தடையை மீறிய ஆர்ப்பாட்ட ஊர்வலமாக நடைபெற்றது.பொலிசாரும் ஊர்வலத்தினரும் மோதலில் ஈடுபட்டனர். பலர் பொலிஸ் தாக்குதலில் காயமடைந்தனர். ஊர்வலத்துக்கு தலைமைதாங்கிய தோழர்கள் ஆஸ்பத்திரியில் பொலிஸ் காவலுடன் வைத்தியம் செய்யப்பட்டு பின்பு அவர்கள் நீதி மன்றில் நிறுத்தப்பட்டனர். அக்காலத்தில் பல நூறு கூட்டங்களை நடத்திய பாராளுமன்றத்திற்கு உண்மையான அதிகாரம் இல்லை. உண்மையான அதிகாரம் ஆயுதப்படை, பொலிஸ்டை, விமானப்டை, கடற்படை, நீதிமன்றம், சிறைச்சாலைகள், உயர் அரச உத்தியோகத்தர்கள் இவர்களிமே உணமையான அதிகாரம் உள்ளது. இவற்றை அடித்து நொருக்கி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஐனநாயக அரசு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும் என்ற மாக்ஸ், லெனினஸ வகுப்புகளை கூறினோம்.
கே.கே.எஸ் சீமேந்து தொழிற்சாலை, பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் ஓட்டு தொழிற்சாலை, மில்க்வைற் சோப் தொழிற்சாலை, சுருட்டு தொழிற்சாலைகள், ஆர்.வி.ஜி பீடிகம்பனி, யாழ்ப்பாணம் மாநகரசபை தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் சார்பில் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது, சம்பள உயர்வு, தொழிலாளர்களின் லீவு விவகாரம், வேலை நேரம், தொடர்பான தொழிற்சங்க போராட்டங்களையும், தொழில் வழக்குகளையும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமே தலைமை கொடுத்து உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்து. அதேவேளை தமிழரசுக் கட்சி தொழிற்சாலை நிர்வாகத்துக்காகவும், முதலாளிகளுக்காகவும் செயல்பட்டதுடன் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் தொழிற்சாலை நிர்வாகத்திற்காகவும், முதலாளிமார்களுக்காகவும தொழில் கோடுகளில் வாதிட்டார். தொழிலாளர்களின் சார்பில் புரட்சிகர கம்யூனிஸட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சண்முகதாசன் தொழிலாளர்களுக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். இவ்வாறான போராட்டங்களின் போது தமிழரசுக் கட்சியும், அவர்களின் சட்டத்தரணிகளும் வர்க்க அடிப்படையில். தமிழ் முதலாளிகளையும், கூட்டுத்தாபன நிர்வாகிக்ளுக்காகவுமே பாதுகாப்பதற்காகவே செயல்பட்டார்கள். தென்னிலங்கையில் 1966களுக்கும் 1970களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிடக்கூடிய பாட்டாளிவர்க்க போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. 1966இல் ட்ட்லி – செல்வா ஒப்பந்த்த்துக்கதிராக (அவ்ஒப்பந்தம் தமிழருக்கு மாவட்ட சபையை வளங்கவிருந்த்து) சிறிலங்கா சுதந்திரக் கட்சி கெனமன் கட்சி, சமசமாஜக் கட்சி மசாலவடே அப்பிட்ட ஏப்பா என்ற ஊர்வலத்தை நடாத்தி நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். அவர்களின் போராட்டத்தால் ட்ட்லி – செல்வா ஒப்பந்த்த்தை அரசு கிழித்தெறிந்த்து. அவ்ஊர்வலத்தில் ஜே.வி.பி தலைவர் றோகண விஜயவீர கலந்துகொண்டார். அதுசம்மந்தமாக புரட்சிகர கட்சி அவிடம் வினா எழுப்பியது. அதற்கு அவர் பதில்ஏதும் கூறாமல், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் அதன் வாலிப சம்மேளனத்திலிருந்தும் வெளியேறி ஜனதா விமுக்தி பெரமுன என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். 1971இல் ஜே.வி.பி ஆயுதக் கிளாச்சி ஒன்றை நடாத்தி அதில் தோல்வி கண்டார். அப்புரட்சி அடக்கப்படும்போது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் கைதுசெய்ப்பட்டு,  அக்கட்சியும் அடக்கப்பட்டு சிதைக்கப்பட்டது. சிறிதுகாலத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வளர்ச்சிடைந்த்து. அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளிக் கெதிராகவும், தமிழ் கடசிகளின் சிங்கள மக்களுக்கெதிரான கொள்கைகளை எதிர்த்தும் பொதுக் கூட்டங்ளையும், ஊர்வலங்களையும், சுவரெட்டிகளையும், பத்திரிகை அறிக்கைகளையும், நேரடி விவாதங்களையும், துண்டுபிரசுரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு தேசிய கடைமையை கட்சி செய்துவந்த்து.

இவ்வாறாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் அன்றும் இன்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மத்தியிலான ஐக்கியத்துக்காகவும், தேசியப்பிரச்சினையை  தீர்ப்பதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பிரதேச சுயாட்சி அதிகாரம் வழங்கும்படியும் அன்று கோரியது. இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கோரும் மாகாண சபைக்கு மட்டுப்படுத்தப்பட்ட காணி மற்றும் பொலுஸ் அதிகாரம் வழங்குவதன் மூலம் ஏற்பட்டிரிக்கும் இனக்குரோதங்களை படிப்படியாக இல்லாதொழிக்க முடியும். தேசியபாதுகாப்பு அதிகாரங்ள், முபடபடைகளின் அதிகாரங்கள் முழுவதும் மத்தியஅரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் வடக்கு, கிழக்குக்கு வழங்கப்படும் காணி, பொலிஸ்.அதிகாரங்கள்  மத்திக்கு கட்டுப்பட்டதாகவே இருக்கும், எனவே இந்தவிடயத்தில் தயக்கம ​காட்டத் தேவையில்லை. இனவாதசக்திகளுக்கு அடிபணிந்து போகாது, தமிழ்மக்களுக்கு வளங்க வேண்டிய உரிமைகளை சிங்களமக்கள் வழங்க வேண்டும் என்ற உண்மையை அரசு சிங்கள மக்களுக்கு தெழிவுபடுத்துவதன் மூலம் சிங்களமக்களின் ஆதரவை பெற்று இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்பது எமது நம்பிக்கை. 

Sunday, February 19, 2017

  வடக்கில் இடதுசாரி இயக்கத்தின் ஆரம்பம்!
ஏ.எம்.சி.இக்பால்
பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கை இருந்தபோது, 1927ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்திற்கு அமைவாக நாட்டில் 21வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை உண்டு என பிரகடனப்படுத்தப்பட்டு முதலாவது சட்டசபை தேர்தலை பிரித்தானிய அரசு இலங்கையில் நடத்தியது. இலஙகைக்கு முழு சுதந்திரம் வேண்டும் எனக் கூறி சிங்கள, தமிழ் தலைவர்கள் அத்தேர்தலை பகிஷ்கரிப்பது என முடிவு செய்தார்கள்.
தேர்தலின்போது சிங்கள தலைவர்கள் பகிஷ்கரிப்பில் கலந்துகொள்ளாமல் தேர்தலில் பங்குபற்றி சட்டசபைக்கான அங்கத்தவர்களை தேர்ந்தெடுத்தனர். ஆனால் தமிழ் தலைவர்களோ சிங்கள தலைவர்களுடன் கூட்டாக எடுத்த முடிவிற்கமைவாக வடக்கில் தேர்தலை பகிஷ்கரித்தார்கள். இதனால் சட்டசபையில் தமிழர்களுக்கென ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்ளையும் இழந்தார்கள். இந்த நடவடிக்கையானது தமிழர்களின் முற்போக்கு நடவடிக்கை என அன்று கருதப்பட்டது.
இரண்டாவது சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது இங்கிலாந்தில் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்று இலங்கை திரும்பியிருந்த  எஸ்.ஏ.விக்ரமசிங்க, கொல்வின்.ஆர்.டி.சில்வா, என்.எம்.பெரேரா, பிலிப் குணவர்த்தனா, ரொபேர்ட் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா போன்ற முற்​போக்காளர்கள் இரண்டாவது சட்டபை தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களில் என்.எம்பெரேராவும், பிலிப் குணவர்த்தனவும் வெற்றி பெற்றனர்.
1935ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குறிப்பிடப்பட்ட அனைவருடன் மேலும் சிலரும் இணைந்து லங்கா சமசமாஐக் கட்சியை ஆரம்பித்தனர். அதனது அரசியல் தாக்கம் வடபகுதியையும் தாக்கியது. இவ்விடயத்தில் குறிப்பிடத்தக்கவர் பருத்தித்துறையை சேர்ந்த எஸ்.தர்மகுலசிங்கமாகும். இவர் ஒரு சட்டத்தரணி எனவே இவர் துணிச்சலுடன் இன்னும் சிலரையும் சேர்த்து வடமராட்சியில் லஸ்கா சமசமாஐக் கட்சியை நிறுவினார். அக்கட்சியின் தலைமையில் பஸ் தொழிலாளர் சங்கம், சுருட்டுத் தொழிலாளர் சங்கம், சாதி அடக்குமுறைளை எதிர்க்கும் சங்கம் போன்ற சங்கங்களை நிறுவி அந்த மக்களுக்காக வாதாடி சில வெற்றிகளை வென்றெடுத்துக் கொடுத்துவந்தார்.
இதனால் சமசமாஐக் கட்சியின் செல்வாக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, கரவெட்டி, யாழ்ப்பாணம், சுன்னாகம் போன்ற இடங்களில் லங்கா சமசமாஐக் கட்சியின் நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தது. இவ்வாறு வளர்ச்சி பெற்று வருகின்றபோது 1939ஆம் ஆண்டு இரண்டாவது உலகயுத்தம் ஆரம்பமாகும் உச்சக்கட்டம், அந்த நேரம் சோவியத் ரஷ்யா தன்னை நாஜிஹிட்லரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக போலந்தின் ஒரு பகுதியை தரும்படிம், அதற்கு பதிலாக ரஷ்யாவின் பகுதியில் மூன்று மடங்கு தருவதாகவும் யுத்தம் முடிய நிலத்தை மாற்றிக்கொள்வோம் எனக போலந்திடம் கேட்டது.​சோவியத் ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த போலந்து அரசு ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து சரணடைந்த்து. எனவே சோவியத் ரஷ்யா தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக தான் கேட்டபகுதயை கைப்பற்றியது. மேற்படி நிகழ்ச்சி ஐரோப்பாவில் ஏற்பட லங்கா சமசமாஜக்கட்சிக்குள் பெரிய வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டது. சோவியத் ரஷ்யா செய்தது சரியென்றும் ஸ்டாலின் செய்த்து பிழைஎன்றும் விவாதம் நடந்த்து. விவாத முடிவில் எஸ.ஏ.விக்ரமசிங்க, பீற்றர்கெனமன், எம்.ஜி.மென்டிஸ், ஆரியவன்ஸ குணசேகர, டபிள்யூ.ஆரியரட்ன, சரணங்கர தேரர், போன்றோர் லங்கா சமசமாஐக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். என்,எம்​பெரேரா, பிலிப்குணவர்த்தனா, ரெராபேர்ட் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா கொல்வின்.ஆர்.டி.சில்வா, போன்றோர் ஸ்டாலின் ஆக்கிரமிப்பாளனும் ரஷ்ய ஏகாதிபத்திய சர்வாதிகாரி என்றும் ரொக்ஸிதான் மாக்ஙிய லெனியவாதியென்றும் கூறி ரொக்ஸியை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டனர். அன்றில் இருந்து இன்றுவரை முதலாளித்துவத்தை பாதுகாக்கும் பாதுகாவலர்களாகவே ரொக்ஸிஸ்டுகள் செயல்லடுகிறார்கள். இலங்கையில் மட்டுமல்ல உலகம்பூராவும் அவர்களது செயல்பாடுகள் அவ்வாறே நடைபெறுகிறது.
வெளியேற்றப்பட்ட எஸ்.ஏ.விக்ரமசிங்க, பீட்டர் கெனமன், எம்ஜி.மெனடீஸ், ஆரியவன்ஸ குணசேகராவும் ஏனைய வெளியேற்றப்பட்டவர்களும் இன்னும் பலரும் சேர்ந்து 1940ஆம் ஆண்டு ஐக்கிய சோஸலிஸட் கட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பின்னர் 1943ஆம் ஆண்டு சாஸலிஸ்ட் கட்சியை இலங்கை கம்யூனிஸட் கடசி என மாற்றிக்கொண்டனர். இக்காலகட்டத்தில் வடக்கிலிருந்து இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று நாடுதிரும்பியிருந்த பொன் கந்தையா, அ.வைத்தியலிங்கம் இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்த ந.சண்முகதாசன், மு.கார்த்திகேசன் போன்றோரும் இன்னும் சிலரும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முழுநேர கட்சி ஊளியர்களாயினர். என்.சண்முகதாஸன் தொழிற்சங்க இயக்க வேலையை பொறுப்பேற்று செயல்பட்டார்.
இவர்கள் நால்வரும் வடக்குக்கு வந்து தமக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்டுகளை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து இயங்கத்தொடங்கினர். ஏற்கெனவே வடபகுதியில் லங்கா சமசமாஐக் கட்சியினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாக்ஸிய லெனினிஸத்தை ஏற்றுக்கொண்ட மாக்ஸிஸ்ட் லெனினிஸ்டுகள் லங்கா சமசமாஐக் கட்சியின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அதிலிருந்து விலகி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள். வடமராட்சி பிரதேசத்தில் பொன் கந்தையாவும், வட்டுக்கோட்டை பிரதேசத்தில் அ.வைத்திலிங்கமும், யாழ்ப்பாண பிரதேசத்தில் மு.கார்த்திகேசனும்,​ கேகே.எஸ் பிரதேசத்தில் சு.வே. சீனிவாசகர், வ.பொன்னம்பலம் போனறோர்​ வேலைசெய்தனர். இதனால் இலஙகை கம்யூனிஸ்ட் கட்சி வேகமாக வளரத்தொடங்கியது. மு.கார்த்திகேசன் அவர்களின் முயற்சியின்பயனாக யாழ்நகரில் எம்.சி.சுப்ரமணியம்,​ கேடானியல், டொமினிக் ஜீவா, ராமசாமி ஐயர், வி.ஏ..கந்தசாமி போன்றோர் வென்றெடுக்கப்பட்டனர். சிறுபான்மை மகாசபயினரான இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாகவும் பிரதான ஊளியர்களாகவும் இருந்தனர். இதனால் நகரப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு வளரத்தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி சிறுபான்மை தமிழர்களுக்கு பலவழிகளில் உதவிசெய்த்து. அதேபோன்​றே பஸ் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், சலுன் தொழிலாளர்கள், சுருட்டு தொழிலாளர்கள் மத்தியில் போர்குணத்துடன் வேலைசெய்த்து. இத்தொழிலாளர்ளை, தாழ்த்தப்பட்ட மக்களை யார் யார் அடக்குகிறார்களா அவர்களுக்கெதிராகவும், அவர்களது தாக்கதலகைளை தாங்கிக்கொள்ளவும், திருப்பிதாக்குதல்​ தொடுப்பதுமான செயல்பாடுகளின் மூலம்​ செயல்பட்டது.   
1952ஆம் ஆண்டு இலஙகை கம்யூனிஸ்ட் கடசி முதலாவது வட பிரதேச வாலிபர் சம்மேளன மாநாட்டை கே.டானியல், வீ.கந்தசாமி, மேன் முத்தையா, போன்றோர் முன்னின்று நடத்தினர். இம் மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்களான எஸ.ஏ.விக்ரமசிங்க, பீட்டர் கெனமன், கம்யூனிஸ்ட் வாலிபர் சங்க உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினர. 1947 பாராளுமன்ற தேர்தலில் பொன் கந்தையா பருத்தித்துறை​ தொகுதியில் கம்யூனுஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தலில் அவர் தோல்விடைந்தாலும் நிறைய கம்யூனிஸ்ட் வாலிபர்ளையும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களையும் திரட்டிக் கொண்டார. இதன்மூலம் கட்சிக்கு பலம்கூடியது .1952  பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு சிறியஅளவு வாகச்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதேவேளை கட்சி மேலும் பலமடைந்த்து. வடமராட்சி பகுதியில் இருந்த தாழ்த்தப்பட்ட  தமிழ்மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சிக்குபெரும்செல்வாக்கு வளர்ந்த்து. ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியிலும் கட்சி கிளைகள் உருவாகின.
1953இல் நடைபெற்ற தேசிய ஹர்த்தாலின்போது வடபகுதியிலும் பஸ் தொழிலாளர், சுருட்டுத் தொழிலாளர்கள், சலூன் மந்றும் சலவை தெழிலாளர்கள், கள்இறக்கும் தொழிலாளர்களும் ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமளவில் பங்குபற்றினர். இந்த ஹர்த்தாலில் வடபகுதியில் இயங்கிவந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும், தமிழரசுக் கட்சியும் இவர்களின் தொழிற்சங்கங்களும், ஆதரவாளர்களும், பெருமளவில் பொதுமக்களும் கலந்துகொண்டு  வடபகுதி மக்களின் ஆதரவை தென்னிலங்கை தொழிலாளவர்க்கத்துக்கு வழங்கினர். இதன்மூலம் அடங்கிக்கிடந்த தமிழ் மக்கள் மத்தியிலான போர்குணம் வளர ஆரம்பித்த்து.. இன்றும் நினைவுகூரப்படும் 1947பொது வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட ஜி.சீ.எஸ்.யூ சங்க உறுப்பினரான அரசாங்க எழுதுவினைஞர் வி.கந்தசாமி யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர்.அவரும் வடக்கில் எழுந்த முற்போக்கு கருத்துக்களால் கவரப்பட்வர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1956இல் நடை பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, காங்கேசன்துறை, பருத்தித்துறை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது. முறையே மு.கார்த்திகேசன், அ.வைத்திலிங்கம், வி.பொன்னம்பலம், பொன் கநதையா. ஆகியோர் போட்டியிட்டனர், இவற்றில் பொன் கந்தையா பருத்தித்றை தொகுதியில் அதிகப்படிளான வாக்குகளைனப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். ஏனைய  மூவரும் தோல்விடைந்தாலும் கணிசமான வாக்குளைப் பெற்றிருந்தனர். தோழர். பொன் கந்தையா எம்.பி.யானதும்  நிலமற்ற விவசாயிகளுக்கு அரச காணிளை பெற்றுக் கொடுத்தும், கல்வி கற்கும் உரிமையற்றிருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பள்ளிக்கூடங்ளை அமைத்துக் கொடுத்தார். 1947களுக்குப் பின் பாராளுமன்றத்திலும், மாநகரபைகளிலும, பட்டினசபைகளிலும், கிராமபைகளிலும் போட்டிபோட்டு கிடைத்த அங்கத்துவங்ளை கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்தை கட்சியின் வளர்ச்சிக்கு பிரதான வழியாக கம்யூனிஸ்ட் கட்சியும், லங்காசமசமாஜக் கட்சிய்யும் கருதி செயல்பட்டன. இம் முயற்சியின் பிரதிபலனாக சு.வே.சீனிவாசகம் கிராமசபை உறுப்பினராகினார், கணபதிப்பிள்ளை காங்கேசன்துறை பட்டினசபை உறுப்பினரானார், சங்கனை பட்டினபயை கைப்பற்றி  எம். முத்தையா தலைவரானார், வைரமுத்து, பசுபதி போன்றோர் அங்கத்தவர்களாகினர். வல்வெட்டித்தறையில் திருப்பதி லைவராக இருந்தார். கரவெட்டி கட்டவேலியில் ஜெயசிங்கம் போன்றோர் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்து பொதுமக்களுக்கு சேவையாற்றினர். இவற்றில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த்து, கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேச் செயலாளராக பதவிவகித்த மு.கார்த்திகேயன் 1954 யாழ் மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்மையாகும். இந்நிகழ்வானது கம்யூனுஸ்ட்டுகள் வடபகுதியில் பலப்பட்டு வருகிறார்கள் என்பதை பறைசாற்றியது. அதேபோல் லங்கா சமசமாஜக் கட்சியின. சார்பில் யாழ் மாநகரசபையில் அவிசுவநாதன், எஸ்.துரைரஜசிங்கமும், உடுப்பிட்டி கிராமசபை தலைவராக ஆர்.ஆர்.தர்மரட்னமும், சுன்னாகம் பட்டினசபை​ தலைவராக பி.நாகலிங்கமும் அங்கத்துவம் பெற்று பொதுமக்களுக்கு சேவைசெய்தனர்.
1957ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமூக குறைபாடுகள் ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும்படி சிறுபான்மை தமிழர்மகாபை 1958 டிசம்பரில் நடைபெற்ற சிறுபானமை தமிழர் மகாசபையில் கோரிக்கை வைத்து. டிசம்பர் 13க்குள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவமாக தேனீர்கடைகள், உணவகங்கள், கோவில்கள் திறந்துவிடப்படவேண்டும். இல்லையேல் அவைகளுக்கு முன்னால் சத்தியாகிரகம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. இது வடபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..கம்யூனிஸ்ட் கட்சியும், சிறுபான்மை தமிழர் மகாசபையும் அதற்கான தயாரிப்புகளை நகரத்திலும் கிராமங்களிலும் செய்யத் தொடங்கியது. சாதிவெறியர்களும், பிற்போக்குவாதிகளும், கோவில் திறப்பு, கடைகள் திறப்பு நடவடிக்கைளை தடுத்து நிறுத்த திரைமறைவில் பல்வேறு ஆலேசனைகளை மேற்கொண்டாலும் அவர்களால் ஏதும் செய்யமுடியாத நிலைமை.
முதலாவதாக அரசாங்கத்தின் சட்டத்தை அமுல்படுத்தும்படி கேட்டே போராட்டம் நடத்தப்படவுள்ளதும், மேலும் யாழ்நகரப்பகுதிகளில் கூடுதலாக தாழ்த்தப்பட்ட மக்கள் செறிந்து வாழ்வதும், கம்யூனிஸ்ட் கட்சியும் முற்போக்காளர்களும் இதற்கு ஆதரவு கொடுப்பதும் போராட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எனவே டிசம்பர் 13ஆம் திகதி யாழ்நகரின் சுபாஸ் கபே, வை.சி.கு.தேனீர்கடை, கோவிந்தபிள்ளை தேநீர்கடை, போன்ற முக்கிய தேநீர்கடைகள் மற்றும் சிறிய தேனீர் கடைகள் தாழ்த்தப்பட்ட்ட மக்களுக்கு  சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. அதேபோல் நல்லூர் கந்தசாமி கோவில், வண்யார்பண்ணை சிவன் கோவிலும் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. அதேவேளை நகரத்தை அண்டிய பிரதேசங்களிலும், கிராமப்பகுதிகளிலும் சாதிவெறியர்களினதும், பிற்போக்காளர்களினதும் ஆதிக்கம் மிகக்கடுதலாக இருந்தபடியால் அங்கிருந்த தேனீர்கடைகள் , உணவகங்கள், கோவில்கள், குளங்கள் எவையுமே 1970வரை  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்துவிடப்படவில்லை.
1950வரை வடபகுதி பிற்போக்கு எழுத்தாளர்கள் சாதிஅமைப்பை பாதுகாத்து எழுதிவந்தார்கள் அதுதான் தமிழ் இலக்கிய சுபாவமாக இருந்த்து. கம்யூனிஸ்ட் கட்சி பலமடையத் தொடங்கியதும் முற்போக்கு எழுத்தாளர்கள் தோன்றத் தொடங்கினர் கே.டானியல்,டொமினிக்ஜீவா, கவிஞர் பசுபதி, இளங்கீரன், நீர்வை பொன்னையன், முருகையன், சில்லையூர் செல்வராசன், அ.ந.கந்தசாமி, பிரேம்ஜி, தெனியான், செ.கணேசலிங்கம், தங்கவடிவேல், ரகுநாதன் போன்றோர் தொழிலாளர், விவசாயிகள், ஏழைஎளிய மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தங்களது டைப்புகளை எழுத்த்தொடங்கினார்கள். பிற்போக்குவாதிகள் இவ்வாக்கங்களை இலக்கியங்கள் என நிராகரித்தாலும், இவைகள்தான் மக்கள் இலக்கியங்கள் என்பதை இவர்கள் நிரூபித்தார்கள்.
அன்று தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழ் மக்கள் அவர்களின் பிற்போக்கு கொள்கைளை எதிர்ப்பதிலும், அக்கட்சிகளின் ஆதரவு பெற்ற முதலாளிகள், நிலஉடமையாளர்களையும் எதிர்த்து வாய்திறக்க முடியாதநிலையில் இருந்தநேரத்தில்தான் லங்கா சமசமாஐக் கட்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் வடபகுதியில் உருவாகி, சாதரண ஏழை எளிய தமிழ்மக்கள், தாழ்த்தப்பட்ட தமிழ்மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பிரச்சினைக்கு தோழ்கொடுத்து உதவிவந்த்து. இக்கட்சிகள் நடாத்தும் மேதின ஊர்வலங்கள், கூட்டங்களில் மக்கள் கலந்துகொண்டு வாய்திறந்து  உரத்தகுரலில் சகல பிற்போக்குகளுக்கும் எதிராக கோஷமிட்டு தம்மை புரட்சிவாதிகளாக்கிக் கொண்டார்கள். இவ் இரு கட்சிகளிலும் 1960 களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறி தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் கூடுதல் ஆதரவை தேடிக்கொண்டது. 1963 காலகட்டத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏறப்ட்ட த்த்துவார்த்த போராட்டத்தில் கட்சி இரண்டாக பிளவுபட்டது என.சண்முகதாசன் தலைமையில் புரட்சிவாதிகள் ஒன்றிணைந்து புரட்சிவாத இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தனர். 
“வடபகுதியில் இடதுசாரி இயக்கம் கட்டுரை பற்றிய                அறிமுகம்!  
பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த நமது நாட்டை விடுதலை செய்துதாம் ஆள வேண்டும் என விரும்பிய நம்நாட்டு முதலாளிகளும், நிலபிரபுக்களும் இலஙகை தேசிய காங்கிரஸ என்ற ஸ்தாபனத்தை 1920களில் ஆரம்பித்து அதனூடாக தமது அரசியல் வேலைகளை ஆரம்பித்தார்கள். முதலில்   ஏ. டபிள்யூ.பெரேரா, பொன்னம்பலம் இராமநாதன், ஜேம்ஸ்பீரிஸ், பொன்னம்பலம் அருணாசலம், போன்றோரால் ஆரம்பிக்கப்பட்ட  இந்த ஸ்தாபனத்தில் பல சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் இணைந்து அந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கினார்கள்இவர்களில் முக்கியமாக குறிப்பிடக்கூடியவர்கள் டி.எஸ்.சேனாநாயக்கா,  எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, சேர் ஜோன் கொத்தலாவல, ஒலிவர் குணதிலகா ஆகியோர் ஆவார்கள்.
அதேவேளை சமகாலத்தில் மற்றுமொரு முதலாளித்துவ பிரிவில் இருந்து லண்டன் ஒக்ஸ்போட், கேம்பிரிஜ் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று நாடுதிரும்பிய பெரும்பணக்காரர்களின் பிள்ளைகளான என்.எம்.பெரேரா, பிலிப்குணவர்த்தனா, எஸ்.ஏ.விக்ரமசிங்க, பீட்டர் கெனமன், கொல்வின் ஆர்.டி.சில்வா, லெஸ்லி குணவர்த்தனா, பொன் கந்தையா, ஏ.வைத்திலிங்கம், றொபேர்ட் குணவர்த்தனா போன்றோர் மாக்ஸிஸ்ட்டுகளாக திரும்பியிருந்தனர். இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து 1935இல் லங்கா சமசமாஜக் கட்சி என்ற ஒன்றை அமைத்து வௌளையனே வெளியேறு இலஙகை இலங்கையருக்கே சொந்தம், எம்மை நாமே ஆளவேண்டும், பிரித்தானிய ஏகாதிபத்தியமே    வெளியேறு,, எமது நாட்டில் பாட்டாளிவர்க்க ஆட்சியை ஏற்படுத்துவோம், உலக பாட்டாளிவர்க்கத்தின் ​ஐக்கியம் நீடூளிவாழ்க, என்ற சுலோகங்களை முன்வைத்து செயல்பட ஆரம்பித்தனர். நாடு முழுவதும் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் இணைத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக பல போராட்டங்களையும், சட்டமறுப்பு போராட்டங்கள், வேலைநிறுத்தங்களையும் நடத்தினர். பிரித்தானிய ஆட்சியில் தொழிற்சங்கங்களும் அவற்றால் நடாத்தப்படும் போராட்டங்களும் சட்டவிரோதமானதும் தண்னைக்குரிய குற்றமாகும்.
 1939 செப்டம்பரில் இரண்டாவது உலகயுத்தம் வெடித்த்து. ஹிட்லரின்  ந்ஜிப்படைகள் போலந்து நாட்டின் மேற்கு பகுதியை சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறியது. உடனேசோவியத் ரஷ்யபடைகள் போலந்தின் கிழக்கு பகுதிக்குள் ஜேர்மன் படைகளின் முன்னேற்றத்தை தடைசெய்தனர். இவ்விடயம் தொடர்பில் லங்கா சமசமாஐக் கட்சிக்குள் பெரும்விவாதம் நடந்த்து. ரஷ்யா கிழக்குபோலந்துக்குள் ஊடுருவியது மிகப்பெரிய தவறு என ல.ச.ச.மாஐக் கட்சியின் தலைவர்களில் பாதிப்பேர் கூறினர் இவ்வாறூ கூறியவர்கள் ரொக்ஸிஸ்ட்டுகளாவர் அவர்கள் சோவியத் ரஷ்யாவை ஆக்கிரமிப்பு நாடு எனக. கூறினர் ரஷ்ய அதிபர் ஸ்டலினும் ஒரு எதேச்சாதிகாரி என்றும் அவர் மாக்‌ஸிஸ்ட் லெனினிஸ்ட் அல6ல என்றும் ரொக்ஸிதான் மபெரும் மாக்ஸிஸ் லெனினிஸ்ட் எனக்கூறி வாதிட்டனர்.  பாதிப்பேர் ரஷ்ய ஊடுருவல் சரியானது என வாதிட்டனர். சரியென வாதிட்டவர்கள் கம்யூனி.ஸ்ட்டுகளாவர். இதனால் லங்கா சமசமாஐக் கட்சிக்குள் பிளவு ஏற்ப்பட்டு அக்கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகள் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் ஐக்கிய சோஷலிசக் கட்சி என்ற ஒன்றை அமைத்து செயல்பட்டு வந்தார்கள். இக்கடசி மூன்று ஆண்டுகள் செயல்பட்டது. 1943 ஜூலை 3ஆம் திகதி அக்கட்சியை கலைத்து விட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை. ஆரம்பித்து இலஙகை கம்யூனிஸ்ட் கட்சியாகவே செயல்பட்டு வருகிறார்கள்
இலஙகை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால தலைவராக டாக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்கவும் பொது செயலாளராக பீற்ரர்கெனமனும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களாக பொன்.கநதையா, ஏ.வைத்திலிங்கம், ஆரியவன்ஸ குணசேகரா, என்.சண்முகதாஸன், எம்.கார்த்திகேசன், எம்.ஜி.மென்டீஸ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். லங்கா சமசமாஐக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஓரளவு பலமான சக்திகளாக வளர்ந்து வந்தன. எனவே அதனை ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் வடபகுதிக்கு (யாழ்ப்பாணம்) 1945 ஆம் ஆண.டு தோழர் கார்த்திகேசனை அனுப்பிவைத்த்து. அன்று தொடக்கம் கம்யூனிஸ்ட் கொளகையின் அடிப்படையில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படடது. 1935 ஆம் ஆண்டு தொடக்கம் மாக்ஸிஸம் லெனினிஸம் இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக வடபகுதியில் சிறுபகுதி மக்கள் மாக்ஸிஸ லெனினிஸ கொளகைகளைப்பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள்., சிலர் அதன் ஆதரவாளர்களாகவும் இருந்து வந்தார்கள். அவர்களின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனரீதியாக காலூன்றியது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தி அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்கள் நடத்திவந்த உரிமைகளுக்கான சாத்வீக போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துவந்தது. ஆனால் உரிமைகள் வெனறெடுக்கப்படவில்லை.அதற்கு சரியான வழியும் காட்டப்படவில்லை. இச்சந்தர்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாடு கூட்டப்பட்டது.
1964 ஐனவரியில் கூட்டப்பட்ட 7வது மாநாடு, சோவியத் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியினால் முன்வைக்கப்பட்ட முதலாளித்துவத்துடன் சமாதான சகஜீவனம், உடனிருந்து வாழும் கொள்கை, பாராளுமன்றம் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும்பாதை ஆகிய திரிபுவாதபாதைளை முற்றாக நிராகரித்தது. ஆயுத பலாத்காரத்தால் அரச அதிகாரத்தை கைப்பற்றுவது. புரட்சியின் மூலம் சுரண்டல் அமைப்பை இல்லாதொழிப்பத்து, சோஷலிஸத்தின் மூலம் முதலாளித்துவ சமுதாயத்தை  அழித்தொழிப்பது ஆகிய புரட்சிர கொள்கைகளை மாநாடு ஏகமனதாக அங்கீகரித்த்து. இவற்றிற்க்கு தலைமைதாங்க தோழர் என்.சண்முகதாசனை அவர்களை நியமித்து அவரை கட்சியின் பொதுசெயலாளராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
1966ஆம் ஆண்டு தோழர் சண்முகதாசனின் வழிகாட்டலின் கீழ் ஆலயப்பிரவேசப் போராட்டம், தேனீர்கடை பிரவேச போராட்டம், பொது கிணறுகளில் தண்ணீர் அள்ளும் போராட்டம் இவ்வாறு பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. எதிரிகளின் பலாத்காரத்துக்கு எதிரான பலாத்கார போராட்டங்கள் நடைபெற்று மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன் கோவில், செல்வசந்நிதி கோவில், பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வர்ர் கோவில் போன்ற பிரசித்திபெற்ற கோவில்கள் நான்கு வருட தொடர்ச்சியான போராட்டங்களின் பின் தாழ்த்தப்பட்ட மக்க்ளுக்கு சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. இதேபோல் சங்கானை, நெல்லியடி, சாவகச்சேரி, அச்சுவேலி, உரும்பிராய், போன்ற இடங்களில் நடந்த் தேனீர்கடை பிரவேச போராட்டங்களின் வெற்றிகள்ல் வடபகுதி பூராவும் அனைத்து தேனீர் கடைகளும் தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு சமத்துவமாக திறந்துவடப்பட்டன..இப்போராட்டங்களின் பிரதிபலனாக கம்யூனிஸட் கட்சியும் அதன் வாலிபர் இயக்கமும் பெரும் சக்தியுடன் வளரத்தொடங்கியது.
1976இல் தமிழர் விடுதலை கூட்டணியின் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தனி தழிழ்ஈழம் என்ற பிரகடனம் முழுதமிழ் மக்களுக்கும நாட்டுக்கும் பெரும் நாசத்தை ஏற்படுத்தியது.அத்தீர்மானம் 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரத்துக்கு வழிவகுத்த்து.. கொழும்பையும் அதனை அண்டிய பிதேசங்களிலும் வாழுந்துவந்த முழு தமிழ் மக்களுக்கும் பேரழிவுளை ஏற்படுத்தியதுடன் பல நூறு தமிழர்களின் உயிர்களையும் காவுகொண்டது..இதனால் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தமிழ் ஈழம்தான் ஒரேவழி என்ற முடிவுக்கு வநது கடந்த 26 வருடங்களாக இலஙகை ஆயுதப்டையுடன் யுத்தம் செய்து ,இறுதியில் தோல்வி கண்ட நிலையில், இனி என்ன செய்வது என சிந்திக்கின் வேளையில் வடக்கில் இடதுசாரி இயக்கம் என்ற இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. இக் கட்டுரையில்  கூறப்படும் கருத்துக்களும் அனுபவங்களும் குறிப்பாக தமிழ் வாலிபர்களின் எதிர்கால போராட்டங்களுக்கு உதவியாக அமையலாம் என் நம்புகின்றோம்.
                                        நன்றி
எம்.ஏ.சி.இக்பால் 

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேச முன்னாள் செயலாளர்.
 நன்றி முழக்கம்

Search This Blog