Friday, January 4, 2019

திருக்கோணமலை தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கவனத்தில்கொள்ள தயாரில்லாத விண்ணப்பம்

“அன்னசத்திரம்ஆயிரம்கட்டல் ஆலயம்பதினாயிரம்நாட்டல் இன்னுமாயிரம்புண்ணயம்கோடி ஆங்கோர்ஏழைக்எழுத்தறிவித்தல்” -                        சுப்பிரமணியபாரதியார்
தமிழ் பல்கலைக்கழக இயக்க மறுமலர்ச்சி அமைப்பு
119/13, குறுகேவத்த, வெலியமுன வீதி, ஏக்கித்த, வத்தளை
கைபேசி: 0776195785

திகதி : 06.07.2018
கௌரவ இரா.சம்மந்தன், திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,
ஏதிர்கட்சித் தலைவரும்,
ஏதிர்கட்சித் தலைவர் அலுவலகம்,
நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதி,
ஐயவர்த்தனபுரக்கோட்டை

கௌரவ ஐயா,

தமிழ் பல்கலைக்கழக இயக்கத்துக்குரித்தான அசையூம், அசையா சொத்துக்கள் கையாடல் தொடர்பானதும், புலமைப்பரிசில் நிதியம் தொடர்பான கோரிக்கையூம்!

மேற்படி தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தின் திருக்கோணமலை பல்கலைக்கழகச் சபையின் முன்னாள் தலைவர்; என்ற வகையிலும், திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையிலும் 1959களிலேயே திருக்கோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவிட வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையூடன் த.ப.க.இயக்கத்துக்கு திருக்கோணமலை தமிழர்களிடம் இருந்து குறைந்த விலையில் நிலங்களை வாங்கிக் கொடுத்து சட்டத்தரணி என்ற வகையில் அந்த நிலங்களை த.ப.க.இயக்கத்தின் பெயரில் உறுதி எழுதிய பொறுப்பை நிறைவேற்றி வைத்தவரும் நீங்களே. எனவே பகல்கொள்ளைக்கு இலக்காகியிருக்கும் த.ப.க.இயக்கத்துக்கு சொந்தமான அசையூம், அசையா சொத்துக்களை பாதுகாத்து அச்சொத்துக்கள் மூலமான வருவாயைக் கொண்டு புலமைப்பரிசில் நிதியம் ஒன்றை நிறுவூவதன் மூலம் மூன்று தசாப்தகால யூதத்தத்தின் கொடுமையால்வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள  ஏழை எளியதமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பேருதவி புரிவதன் மூலம் இலங்கை தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பெற்றுக்கொள்வீர்கள் என்பது எமது நம்பிக்கை.

ஈழ யூத்தம் பின்னடைவை சந்தித்ததன் பின்பதாக தமிழர்களின் அரசியல் சுதந்திரத்தை பெற்றெடுக்கும் பாரிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் தங்களின் பொறுப்பாகிவிட்டது. எனவே இந்த விடயத்தையூம் தங்கள் தலையில் சுமத்த விரும்பாமல் நாம் சிலர் இந்தக்காரியத்தில் ஈடுபட்டு வருகின்றௌம். திருக்கோணமலையில்தமிழர்களின் இருப்புக்கான அடையாளங்களை துவம்சம் செய்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டுவரும்பேரினவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கிவரும் பிழைப்புவாதக் கும்பல்களின் காட்டிக்கொடுப்புகளை தோற்கடிப்பது சுலபமானதல்லஎன்பது தாங்கள் அறியாததொன்றல்ல, எனவேதான் இவ்விவகாரத்தில் தங்களின் தலையயீட்டை வேண்டி நிற்கின்றௌம், ஏற்கெனவே இரட்டை அங்கத்தவர் தொகுதியானமூதூர் தொகுதியை ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக ஏற்றுக் கொண்டதன் மூலம் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் ஒன்றை இழந்தோம். கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலை இழந்தோம். அடுத்து இந்துக்கள் இறந்தவர்களின் அந்தியேட்டி கிரிகைகளை மேற்கொள்வதற்க்கு வசதியாக ஸ்ரீமான் சிற்றம்பலம் சண்முகம் தனக்கு சொந்தமான நிலத்தில் நிறுவிக்கொடுத்ததும் பின்னர் திருவாட்டி சண்முகம் தங்கம்மாள்  சண்முகா நம்பிக்கை நிறுவனத்துடன் இணைத்த அந்தியேட்டி மடத்தையூம் இழந்தோம். தற்போது கன்னியாவூக்கும் தமிழர்களுக்கும் எந்த உரிமையூம் இல்லை என்றாகிவிட்டது.வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயமும் புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின்மேற்பார்வைக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. திருக்கோணமலையில் தமிழர்களுக்கு தொழில் வழங்கிக் கொண்டிருந்த தமிழர் ஒருவருக்கு செரந்தமான கண்ணாடித் தொழிற்சாலைஇ பேசித்தீர்க்க வேண்டிய சிறிய பிரச்சினைக்குஇ பெரிய போராட்டத்தை நடாத்தி மீண்டும் திறக்கமுடியாதவாறான நடத்தை ஏற்படுத்தி மூடவைத்தார்கள். இதனால் பெரிதும் பாதிக்பப்பட்டது செல்வநாயகபுரம் கிராமமேயாகும். தற்போதும் த.ப.க.இயக்கத்துக்கு சொந்தமானதும்இ வளர்ச்சிப்பாதையில் இயங்கிவந்ததுமானகமத்தெழில் கால்நடை வளர்ப்பு பயிற்சிநிலையம் ஈ.பி.டீ.பி காரர் என்ற போர்வையில் பகல் கொள்ளைக்இலக்காகி அதன் அடையளத்தையே இழந்து நிற்கிறது.இங்கு தமிழர்களுக்கு தமிழர்களே குழிவெட்டும் துரோகத்தை நாம் காண்கிறௌம்.

போற்றுதலுக்குரியவரும் திருக்கோணமலையின் காவலருமான நீங்கள் கட்டாயமாக பகல் கொள்ளைக்கு இலக்காகியிருக்கும் வருங்கால தமிழ் மாணவசெல்வங்களின் கல்விச் சொத்தை மீட்டெடுத்து பாதுகாத்து அச்சந்ததியினருக்கு பயன்படும் வகையில் தங்களின் சிந்தனைக்கு எட்டியவாறு ஓழுங்கு படுத்தி திருக்கோணமலையில் தமிழர்களின் இருப்பை நிலைநிறுத்துங்கள் ஏன வேண்டி நிற்கிறௌம்.

நன்றி!

இவ்வண்ணம்
உங்கள் சேவையை நாடும்


(பூ.சந்திரகுமாரன்)
(வாழ்நாள் உறுப்பினர்)

Search This Blog