Tuesday, February 19, 2019



திருக்கோணமலை நகராட்சி மண்றத்தில் பொங்கல் விழாஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் திருவிழா! 


இந்து கலாசார மண்டபம் கலாசார மண்டபமாக மாறியதன் விழைவா?
இராணி அப்பகாத்துக்களினால் தமிழர்களை காக்க என்ற போர்வையில் நிறுவப்பட்ட தமிழ் கட்சிகளில் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோணமலை மாடை;டக்; கிளையின் பொங்கல்விழா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. ஷ
துமிழ் பல்கலைக் கழகத்தின் மண்டபம் “இந்து கலாசார மண்டபமாக” பெயர் சூட்டப்பட்டபின் இப்தார் நிகழ்;ச்சிகளும்இ  ஓளிவிழாக்களும் விமரிசையாக நடாத்தப் பெற்றன. வேற்றுமதத்தவர் ஓருவருக்கு இந்து கலாசார மண்டபத்தை குத்தகை என்ற பெயரில்; ஓப்படைத்ததன் து~;டத்தனமான விழைவுதான் இது.
பின சில பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையிலும் கொழுத்த சம்பாத்தியத்தை இழக்க தயாரில்லாமலும் இந்து கலாசார மண.டபத்தை கலாசார மண்டபம் எனக் கூறிக்கொள்ளும்  வேற்று மதத்தினனான குத்ததைகாரர் ஐனரஞ்சன் என்பவரால் தன்னிச்சையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனாலா தமிழர்களின் பொங்கல் விழா இங்கு நடத்த முடியாது போனது. தேர்தல்களை எதிர்பார்த்தா இந்த பொங்கல் விழா?
துமிழ் பல்கலைக்கழகத்தின் அசையும், அசையாச் சொத்துக்கள் சூறையாடப்பட்ட பொழுதும் இத் தமிழ் பல்கலைக்கழக இயக்கம் தோன்ற அடி எடுத்துக்கொடுத்த இந்த தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக இருந்த ஒருவரின் பூமியில் இச்சூறையாடல் நடைபெற்ற பொழுதும், தொடர்ந்து நடைபெறும் பொழுதும் மௌனமாக இருப்பதேன்;?
ஒரு காலத்தில் தென்கிழக்கு ஆசியாவின் ரோமாபுரி என அழைக்கப்பட்ட பூமியில் சைவத்தில் பற்றுதல் கொண்ட இராவனேச்சுரரின் இப் பூமி இந்த நிலைக்கு தள்ளி விடப்பட்டது யாரால்?
மிக அண்மையில் தேர்தல்களை எதிர்பார்த்துத் தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ளவா இம் மண்ணில் இப் பொங்கல் விழா?
கன்னியா பறிபோன போதும் மடத்தடி வீரகத்தி பிள்ளையார் கழிவறையாகப் பயன்பத்தப் பட்ட பொழுதும் பொங்காதவர்கள் இப்போது பொங்குவதேன்? தமிழ் பல்கலைக் கழகத்தின் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை கொண்ட “இந்து கலாசார மண்டபத்தில்” தமிழர் கலாசாரரத்தின் உயர்ந்த அடையாளமான பொங்கல் விழாவுக்கு  அனுமத மறுத்த சர்வவல்லமை படைத்தவர் யார்?
பதில் தருவார்களா?

ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இஸ்லாமிய கலாசார உடையான “ஹபாயா” உடுத்து கல்லூரிக்கு சமூகம் கொடுத்தமையானது கல்லூரியின் ஸ்பகரும் இந்துமத பற்றாளர்களுமான ஸ்ரீமதி தங்கம்மாள் சண்முகம் அவர்களின் இலட்சியம் கொச்சை படுத்தப்பட்டு விட்டதாகவும் இநதுமக்களின் மரபுரிமை மீறப்பட்டு விட்டதாகவும் போர்கொடி தூக்கி இஸ்லாமிய ஆசிரியைகள் இருவருக்கு;ம் இடமாற்றம் பெற்று கொடுத்தவர்கள் இந்து கலாசார மண்டபம் பிழைப்புக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக மௌனித்திருப்பதேன்? ஸ்ரீமான் சண்முகம்தங்ம்மாள் தம்பதியினரின
திருக்கோணேஸ்வராலய எல்லைக்குள் கடைகளை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுவதனால் கோணேஸ்வராலயத்தின் புனிதத்துக்கு பங்கம் எற்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதே போல் சைவசமயத்தை முன்நிறுத்தி ஸ்ரீமதி தங்கம்மாள் சண்முகம் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சண்முகா நம்பிக்கை நிறுவனத்துக்குள் (shanmuga trust) அடக்கப்பட்ட சண்முகா ஆண்கள் இல்லம் இந்து அல்லாத  வேற்று மத பிரச்சாரகரான பா.ஐனரஞ்சனிடம் ஓப்படைத்தது யார்? இது சண்முகா நம்பிக்கை நிறுவன ஸ்தாபகர் ஸ்ரீமதி தங்கம்மாள சண்முகம் .அர்களுக்குக்கு செய்கின்ற துரோகமாகாதா? 
உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் தெட்சணகைலாயம் என கௌரவிக்கப்படும்  திருக்கோணமலையில் இந்துசமயம்  எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடிகளில் மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பு இந்துசமய மக்களினதும், நாடு தழுவியரீதியில் இயங்கும் இந்துமா மன்றங்களினதும், இந்து கலாச்சார அமைச்சினதும் பொறுப்பாகும் இப்பிரசுரத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து திருக்கோணமலையில் இந்து கோவில்களும், இந்சமயத்தை முன்நிறுத்தி நிறுவப்பட்ட நிறுவனங்களும் எதிர்கொண்டுள்ள சவால்களில் இருந்து மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுடன் இவ்வாறான துஷ்டதனமான செசயற்பாடுகளின் பின்னணியில் இயங்கும் வெள்ளை வேஷ்டி கொள்ளையரை வெளிச்சத்துக்கு கொண்டுவம்படி மாண்புமிகு இந்துகலாசார அமைச்சர் கௌரவ மனோகணேசனிடம் திருக்கோணமலை இந்து மக்கள் சார்பில் வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.

Saturday, February 16, 2019



கற்றோரிடமும் தமிழ் கல்வி சமூகத்திடமும்   வினயமாக ஒரு வேண்டுகோள்  


ஈழம் வாழ் தமிழ்கல்வி மான்களே பல்கலை பேராசிரியர்களே பல்கலை மாணவர்களே உயர்கல்வி கற்கும் மாணவச் செல்வங்களே தங்களிடம் பணிவானதும் மிகமுக்கியமானதுமான வேண்டுகோள். 

ஒரு இனத்தின் இருப்புககும் மேன்மைக்கும் வெறும் அரசியல்வாதிகள் மட்டும் செயற்பட்டால் போதுமானதல்ல என்பதனை எமது வரலாறும் உலகநாடுகளினதும் வரலாறுகளும் கற்றுத்தந்துள்ளன. 
அதன் அடிப்படையிலேயே 1950களில் எமது கல்விமான்கள் ஆழமாகச் சிந்தித்து எமக்கென ஒரு தனியான பல்கலைக்கழகத்தினை நிறுவிடத் திட்டம் இட்டனர். 
ஆந்த அடிப்படையில்1957ல் ஒன்றுகூடி  தமிழ் பல்கலைக்கழக இயக்கம் என்ற ஒன்றை நிறுவி பரவலாக தமிழர்களிடமிருந்து பணத்தை பலவகைகளிலும் சேர்த்து ஈழத்தின் மையமான திருக்கோணமலையில் காணிகளை கொள்வனவு செய்து 1959ம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழகம் நிறவ  முதல்நிர்வாகக் கட்டிடம் ஒன்றிற்க்கு திருக்கோணமலை உள்துறைமுகவீதியில் உள்ள  ஐந்தேகால் ஏக்கர் நிலப்பரப்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. 
ஆதன் விரிவஞ்சி அதன் சுருக்கமான வரலாற்றை மறைக்கப்பட்ட உண்மைகள’ என்ற சிறுநூலில் உதிர்வு செய்துள்ளோம்.
தற்சமயம் எமது மக்கள் மத்தியில் காணப்படும் புல்லுரிவிகள் சிலரால் எமது உயரிய குறிக்கோளிற்க்கும் இருப்பிற்கும் தடையாக அதன் அசையும் அசையா செத்துக்களை சூறையாடியுள்ளதுடன் மிகுதியையும் சுருட்டும் நிலையில் உள்ளனர்.இந்த நாசகார செயலில் இருந்து தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தின் சொத்துக்களை மீட்டெடுத்து அமதனை எமது எதிர்கால சந்ததியினரின் கலவி மேம்பாடடுக்காக மீளக்கட்டியெழுப்ப வேண்டியது ஈழத்தமிழர் ஒவ்வருவரதும் தலையாய கடமையாகும். 
ஆகவே இந்த நல்நோக்கத்துக்காக எமது இருப்பையே கேள்விக் குறி ஆக்கியவர்களிடமிருந்து மீட்டெடுத்து “தமிழ் பல்கலைக்கழக இயக்கம”; எந்த நேக்கத்துக்காக நிறுவப்பட்டதோ அந்த வழியிலேயே அதனை பயன்டுத்தி,கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான போர்சூழலில் அனைத்தையும் இழந்து நிற்கும் எமது எதிர்கால சந்ததியினரான தமிழ் மாணவ மாணிக்கங்களின் கல்வியை நிலையாக இருந்து காப்பற்றிட நிரந்தர புலமைபரிசில் நிதியம் ஒன்றை நிறுவிட நாம் எல்லோரும் ஓன்றுபட்டு கோடரிகாம்புகளிடம் இருந்து ‘தமிழ் பல்கலைக்கழக இயக்கம’ என்னும் மாபெரும் விருட்சத்தை பாதுகாத்திட வேண்டும்.
இழந்தவற்றை மீட்டும் எஞ்சியவற்றை பாதுகாத்து காப்பாறு;றுவது எம்மனைவரதும் தலையாய பொறுப்பாகும். எமது தலைவர்கள் என்ற நம்பிக்கையில் எமதுமக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து  பாராளுமன்றம் ஆனு;பிவைத்த எமது பிரதிநிதிகள் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் புறந்தள்ளி,  பதவி சுகங்கiளுகு விலைபோய் எமக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளுக்கும் மூலவிசையாக செயல்பட்ட இனவாத சக்திகளின பதவியை பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்திலும் நீதிமனறத்திலும் ஆக்ரோசத்துடன் போராடும் கன்றாவியை பார்த்து கண்ணீர்வடிக்கும் கையறுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது பிரச்சினைகளுக்கு நம்கையே நமக்குதவி என்ற ;முதுமொழிக்கமைய எமது பிரச்சினைக்ளுக்கு தீர்வுகாண நாமே வீதிக்கிறங்கி போராடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்
ஆகவே நாம் எமது உறங்கு நிலையிலிருந்து விடுபட்டு நியாயமான தேவைகளுக்காக ஒன்றிணைந்து செயற்பட திடசங்கற்பம் பூண்டு ஆவன செய்ய  முன்வருமாறு வேண்டி நிற்பதுடன் எமக்காக போராடி தமது இன்னுயிரை தியாகம் செய்த தியாக செம்மல்களின் தியாகத்தை பெறுமதி மிக்;கதாக்கவும் அவர்களின் ஆத்மசாந்திக்காவும்  உழைத்திட முன்வருமாறு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி 
இவ்வண்ணம்
தமிழ் பல்கலைக்கழக இயக்க மறுமலர்ச்சி அமைப்பு சார்பாக

(பூ.சந்திரகுமாரன்)
ஒருங்கிணைப்பாளர் சார்பில் 

Search This Blog