Sunday, September 26, 2010

திருக்கோணமலை வீரகத்திபிள்ளையார் கோவில் எதிர்கொள்ளும் சவால்கள்! பி.எஸ்.குமாரன



பேரினவாத காடையர்களின் கைவரிசையால் சிதைந்துபோயிருக்கும் வீரகத்தி பிள்ளையார் கோவிலின் உட்புற, வெளிப்புறத்தோற்றங்கள்.

தமிழர்களின் வரலாற்றுசான்றுகள் நிறைந்ததும் தமிழர்தாயகத்தின் தலைநகரம் என ஈழத்தமிழர்களால் கருதப்படுவதுமான திருக்கோணமலை நகரின் நுளைவாயிலான மடத்தடி என அழைக்கப்படும் பகுதியில் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருந்த வீரகத்திப்பிள்ளையார் கோவில் திருக்கோணமலையில் தமிழர்களின் வரலாற்று உரிமையை பறைசாற்றும் 300 வருட பழமைவாய்ந்த வரலாற்றைக்கொண்டதாகும்;;. இந்த கோவிலுக்கு சொந்தமானதும் கோவிலை சூழஉள்ளதுமான நிலப்பரப்புகளை சொந்தஇனத்துரோகிகளின் மறைமுக ஒத்துழைப்போடு பேரினவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு பறிகொடுத்து அவர்களின் சுற்றிவளைப்புக்குள் சிக்கி சிறைபட்டு சீரழிவுக்குள்ளாகி உள்;ளகாட்சியையே காணமுடிகிற
து இக்கோவிலின் தற்போதைய நிலமையானது திருக்கோணமலையில் தமிழர்களின் பாரம்பரிய உரிமைகள் சொந்தஇனத்துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டுவரும் நிலைமைக்கு உயிரூட்டமுள்ள சாட்சியமாக திகழ்;கிறது.


வரலாற்றுச் சுருக்கம்!
1650ல் திருக்கோணமலை வழித்தோன்றல்களில் ஒருவரான பெரியராசக்கோன் முதலியார், தனக்குசொந்தமானதும் வீரகத்தி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளதுமான நிலப்பரப்பில் சிறியபிள்ளையார் கோவில் ஒன்றையும் அதற்கருகில் மடம் ஒன்றையும் கட்டினார். இக்கோவிலே பிற்காலத்தில் வீரகத்திபிள்ளையாh.; கோவில் என அழைக்கப்பட்டது பெரியராசக்கோன். முதலியாரின் மறைவை அடுத்துஇ அவரது பரம்பரையினராலேயே இக்கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது பெரியராசக்கோன் முதலியாரின் பரம்பரையினருக்கே இக்கோவில் உரித்தானதாக இருந்துவருகிறது.
1801ல் பெரியராசக்கோன் முதலியாரின் பரம்பரை வழித்தோன்றவல்களாகிய அகிலேசபிள்ளை வேலுப்பிள்ளை என்பவரும் சுவாமிநாதமுதலியாரின் மகனுமாகிய வீரகத்திராசக்கோன் முதலியாருமாகச் சேர்ந்து சிறியதாக இருந்த வீரகத்திப் பிள்ளையார் கோவிலை திருத்தி பெரியளவில் திருப்பணிகளை மேற்க்கொண்டனர். இத்திருப்பணிகளை ஆரம்பிக்குமுன் அகிலேசபிள்ளைஇ வேலுப்பிள்ளை, இராசக்கோன் முதலியார்,இவர்களது குடும்பத்தை சார்ந்த இன்னுமொரு முதலியார்.,கணபதி குருக்கள் ஆகிய நால்வரும் இணைந்து சாசனம் (உடன்படிக்கை) ஒன்றை எழுதிக்கொண்டதாக


பேரினவாத காடையர்களின் கைவரிசையால் சிதைந்துபோயிருக்கும் வீரகத்தி பிள்ளையார் கோவிலின். வெளிப்புற பக்க்;வாட்டான தோற்றம்.


சொல்லப்படுகிறது,இவ்உடன்படிக்கை, இவ் உடன்படிக்கையின் பின்னரே பின்வரும் திருப்பணிகள் செய்யப்பட்;ன .பெரியராசக்கோன் முதலியர்ருடைய தர்மமடம் அமைந்திருந:;த நிலத்தில் வீரகத்தி ராசக்கோன் முதலியார் ஊர்மக்க்கள் வழங்கிய நன்கொடைகளையும:; சேர்த்து கற்பகிரகம்இ அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்தம்பமண்டபம், சுற்றுமதில் உட்புறத்தில் மடப்பள்ளி களஞ்சியம், யாகசாலை, வாகனசாலை, என்பவைகளும் வடக்குவீதியை அண்டியதாக குருக்கள், பிராமணருக்கு அக்கிரகாரம், சங்கமர் குடியிருக்க வீடுகளும், கிணறுகளும் கட்டிமுடித்ததுடன் கோவிலுக்கு தேர், வாகனங்கள், கேடயங்கள் குடை, கொடி, ஆலவட்டம் முதலிய பரிவட்டங்களுடன் பொன், வெள்ளி நகைகளும் சேர்த்து வெகுவிமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது இதையடுத்து கோவிலில் இரண்டுகால பூசைகள் நடைபெற்றுவந்தது..;

இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும் எனப்பேரவாகொண்ட திருக்கோணமலை ப+ர்வீககுடிமக்கள் கோவிலை சூழவும் அதனை அண்மித்ததுமான பகுதிகளிலும், திருக்கோணமலை நகர்புறத்திலும் பெருமளவிலான நிலங்களையும்; தம்பலகாமம் பகுதியில் கணிசமானஅளவு வயல்நிலங்களையும் கோவிலுக்கு தேவையான வருவாய்யை பெற்றுக்கொள்ள ஏற்புடையதான அசையாசொத்தாக வழங்கியிருந்தனர். இவ்விதமாக கோவிலுக்கு நம்பிக்கைசொத்தாக வழங்கப்பட்ட நிலபுலன்கள் இன்று சொந்தஇனத் துரோகிகளின் ஒத்தாசையுடன அடாத்தான் ஆக்கிரமிப்புக்கு இலக்காகி உள்ளது

1878ல் வேலுப்பிள்ளை இறைபதம் அடைந்ததை அடுத்து அவரதுமகன் அகிலேசபிள்ளையும், 1910ல் அவரது மறைவுக்குப்பின் அவரது மூத்தமகன் அ,இராசக்கோனும், மயில்வாகன முதலியார் சுப்ரமணியம் என்பவரும் வீரகத்திபிள்ளையார் கோவிலை பரிபாலித்துவந்தனர். அ . இராசக்கோன் அரசாங்கஉத்தியோகத்தில் இருந்தமையினால் அவருடைய சகோதரன் அ. அழகக்கோன் என்பவரும் ம. சுப்ரமணியம் என்பவரும் ஆலயத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்று ஆலயத்தை பரிபாலித்துவந்தனர் இவர்களின் பரிபாலனத்தின்போது 1942 மாசிமாதம் 6ம் திகதி இக்கோவிலில் நவக்கிரகங்களை பிரதிஷ்டைசெய்து கும்பாபிஷேகத்தை நடாத்திவைத்தனர், இகோவிலுக்கு நான்கு கும்பாபிஷேகங்கள். நுடாத்தப்பட்டதாகவும் ஒவ்வொரு கும்பாபிஷேகத்தின்போதும் ஆலயதிருப்பணிவேலைகளும் நடைபெற்றுள்ளன. இவ்வாறாக திருக்கோணமலை தமிழர்களின் வரலாற்று உரிமையை பறைசாற்றிநின்ற வீரகத்திபிள்ளையார் கோவிலின் இன்றைய நிலைமையானது. திருக்கோணமலையை பாரம்பரியமாக கொண்ட தமிழர்களின் இருப்பு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கான சாட்சியமாகும்


சீரழிவின்பின்னணி

2வது உலகயுத்தத்த காலத்தின்போது திருக்கோணமலையில் ஏற்பட்ட நிலைமைகள் காரணமாக கோவில் செயல்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்தது, இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருக்கோணமலை பிரமுகர்கள் வரிசையில் ஒருவராககருதப்பட்டவரும் நீதித்துறையில் முக்கியபதவி வகித்தவருமான கிறிஷ்ணதசன் என்பவர் வீரகத்தி பிள்ளையார் கோவிலை அடாத்தாக கைப்பற்றி அதன் சொத்துக்கள் மீதாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். கிறிஷ்ணதாசனின் ஆதிக்கத்தின் பின்னரே வீரகத்தி பிள்ளையார் கோவிலின் நிலபுலன்கள் பேரினவாதிகளின் அத்துமீறிய குடியேற்றங்களுக்கு பலியாகின குறிப்பாக கோவில் வெளிவீதிக்கும் பிரதான வீதிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் சிங்கள முதலாளிகள் அத்துமீறி கடைகளை அமைத்துக்கொண்டனர். கோவில் நிலங்களில் அத்துமீறி குடியேறிய பேரினவாதிகளிடம் கணிசமான பணத்தை பெற்றுக்கொண்ட கிறிஷ்ணதாசன நிலங்களை காலவரையற்ற குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பேரினவாதிகளின் அத்துமீறிய குடியேற்றங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கிறிஷ்ணதாசனின் பிடியிலிருந்து கோவிலை மீட்டெடுக்க வேண்டிய கடைப்பாடுடையவர்களும், கோவிலின் சட்டரீதியான தர்மகர்த்தாக்களுமான பெரிய ராசக்கோன் முதலியார் பரம்பரையின் வழித்தேன்றலுமான அகிலேசபிள்ளை மாவட்ட நீதி மன்றில் கிறிஷ்ணதாசனுக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல்செய்தார். இவ்வளக்கு கிட் டத்தட்ட 16 வருடங்கள் நடைபெற்றதன் பின்னர் கிறிஷ்ணதாசனுக்;கு எதிராக தீர்ப்பு வளங்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து கிறிஷ்ணதாசன் அப்பீல் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களுக்கு அப்பீல்செய்தபோதும் அந்நீதிமன்ற ங்களிலும் கிறிஷ்ணதாசனுக்கு தோல்வியே கிடைத்தது அப்பீல்நீதிமன்றங்களில் 4வருடங்கள் விரயமாகின. இவ்வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அகிலேசபிள்ளை இறைபதம் அடைந்ததை தொடர்ந்து அவரது மகனான கணேசலிங்கம் தந்தையின் பொறுப்புகளை கையேற்றுக்கொண்டார்.

நீதிமன்ற உத்தரவுக்கிணங்க வீரகத்திபிள்ளையார் கோவில் பெறுப்புகளை ஏற்றுக்கொண்ட கணேசலிங்கத்திற்கும் கோவில் நிலங்களில்அத்துமீறிய குடியேற்றவாசிகளுக்குமிடையில் முறுகல்நிலை தோற்றம்பெற்றது. இந்நிலமையின் பின்னணியில் கிறிஷ்ணதாசனு;ம் அவரது நம்பிக்கைக்குரிய கையாட்களான தவசலிங்கம், சிவபாதசுந்தரம் ஆகியோர் செயல்பட்டதாக மடத்தடி வட்டாரங்களில் பேசப்பட்டது. பெருமளவான கோவில் நிலங்கள் சட்டவிரேதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு அவற்றிற்கு சட்டவிரோதமாக உறுதிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன இங்கு கவலைக்குரிய விடயம் என்னவெனில், சட்டவிரோத உறுதி களை தயாரித்தவர்கள் திருக்கோணமலையை சேர்ந்த தமிழர்களான சட்டத்தரணிகளாகும் கோவில் நிர்வாகத்தின் சட்டரீதியான அங்கீகாரமற்ற அத்துமீPறிய குடியேற்றவாசிகளுக்கு திருகோணமலை நகரசபை சட்டரீதியான அனைத்து வசதிகளையும் வழங்கியிருப்பதன் மூலம் சட்டரீதியான குடியிருப்பாளர்களாக அத்துமீறிய குடியேற்றவாசிகள ; ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

1983ல் நாடுதழுவியரீதியில் தமிழ் மக்கள் மீதாக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை இனஒழிப்பு கலவரத்தின்போது திருக்கோணமலை மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்து கோவில்களில் வீரகத்தி பிள்ளையார் கோவில் முதன்மையானதாகும்.. அன்றிலிருந்து இடிபாடுகளுடன் காணப்பட்;ட கோவில் 1987ல் கைச்சாத்தான இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு அமைவான இந்தியராணுவ த்தினரின் வருகையை அடுத்து உருவான புதியநிலைமைகளின் கீழ் வீரகத்திபிள்ளையார் கோவில் எதி;ர்கொண்ட பேரினவாத நெருக்கடிகளிலிருந்து விடுதலை கிடைத்ததனால் கோவில் சிறு சிறு திருத்த வேலைகளுடன் நித்திய பூசைகள் ஆரம்பமாகின. 1990ல் இந்திய ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து திருக்கோணமலையில் இடம்பெற்ற அரசஆ தரவுடனான பேரினவாதிகளின் வெறியாட்;டத்திற்கு பலியான இந்துகோவில்களில் மிகமோசமாக பாதிக்கப்பட்டது வீரகத்திபிள்ளையார் கோவிலேயாகும். அதேபோல் கோவில் பரிபாலகர் கணேசலிங்கத்துக்கு பேரினவாதிகளின் அச்சுறுத்தல்களும் அதிகரித்தன .மறுபுறமாக கோவிலை கைப்பற்றும் முயற்சியில் கிறிஷ்ணதாசனின் வழிகாட்டலில் தவசலிங்கம், சிவபாதசுந்தரம் கும்பல் ஈடுபடத்தொடங்கியது இதற்காக இவர்கள் கணேசலிங்கத்தை அச்சுறுத்தும் விதத்திலான நடவடிக்கைகளிவல் ஈடுபட்டனர் இந்தவிடயத்தில் மிகதந்திரமாக செயல்படுவதில் கைதேர்ந்தவரான தவசலிங்கம் ஆயுதம் தாங்கிய தமிழ் ஜனநாயக அரசியல்கட்சிகளான ரெலோ, புளட், ஈ, பி , டி ,பி போன்ற கட்சிகளின் ஆதரவை நாடியபோதும் வீரகத்திபிள்ளையார் கோவில் விடயத்தில் தவசலிங்கத்தின் தந்திரோபாயம். தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் கணேசலிங்கம் பரம்பரைக்கு சொந்தமான சுpவன் கோவிலை சிவன்கோவிலடி சண்டியன்களின் ஓத்தாசையுடன் கைப்பற்றுவதில் தற்காலிக வெற்றிகண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவசலிங்கம் சிவன்கேவிலை கைக்கற்றியதன் பின்னணியில் சிவன்கோவில் நிலங்களை அபகரிக்கும் சதித்திட்டம் இருப்பதாக விசயம்அறிந்த வட்டாரங்களில் பேசப்படுகிறது. ,

வீரகத்திபிள்ளையார் கோவில் தொடர்பாக் பேரினவாத காடையர்களின் காடைத்தனத்தின் பின்னணியில் கிறிஷ்ணதாசன், தவசலிங்கம், சிவபாதசுந்தரம் கும்பல்க ளின் ஊக்குவிப்புக்கு மேற்கூறப்பட்டுள்ள விடயங்கள் போதுமான சாட்சியமாகும். பாரியசே தங்களுக்குள்ளாகியிருக்கும் 300 வருடகால வரலாற்றையுடைய வீரகத்திபிள்ளையார் கோ வில் புதிதாககட்டியெழுப்ப வேண்டிய நிலமைக்குள்ளாகியுள்ளது. இத்தகைய துர்ப்பாக்கிய நிலமை வீரகத்திபிள்ளையாருக்கு ஏற்பட்டமைக்கான பொறுப்பை கிறிஷ் ணதாசன், தவசலிங்கம், சிவபாதசுந்தரம் கும்பல் பொறுப்பேற்க்கவேண்டும் என்பதே திருக்கோணமலை மக்களின் கருத்தாகும்;.


கோவிலின் வசந்த மண்டபத்தில் வீரகத்திபிள்ளையார் பாலஸ்தானம் செய்யப்பட்டிருக்கும் புதிதாக கட்டப்பட்ட சிறிய அறையையும் அறையின் பின்புறத்தில் காடையர்கள் மலசலம் கழித்திருக்கும்;; காட்சியையே படத்தில் காண்கிறீர்கள் இப்படம் 18 – 08 – 2010 திகதி பிடிக்கப்பட்டது

தற்போதைய நிலவரப்படி பரிபாலகர் கணேசலிங்கம் இடிபாடுகளுடன் காணப்படும் கோவிலின் வசந்;தமண்டபத்தில் சிறியஅளவில் அறையொன்றை கட்டி அதில் வீரகத்திபிள் ளையாரை பாலஸ்தானம் செய்து பூசைநாடாத்தி வருகிறார் அதேவேளை அந்தஅறைக்கு பின்புறமாக மலசலம்கழித்து கோவிலின் புனிதத்;தன்மைக்கு பங்கம்விளைவித்து வருகின்றனர்.சிங்கள பேரினவாதிகள் எந்த ஒரு இனத்தினதும் வரலாற்றுரீதியான வாழ்வுரிமையை மறுதலிப்பதானால் அந்த இனத்திற்குரியதானதும் வரலாற்றுரீதியான அடையாளங்களான கல்வி, கலை, கலாச்சார, பண்பாட்டு ஸ்தாபனங்களையும், வணக்கஸ்தலங்களையும் நிர்மூலம் செய்வதன் மூலம் அதனை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும். தற்போது திருக்கோணமலையில் பேரினவதம் செயற்படுத்திவருவதும் தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று அடையாளங்களை அழித்தொழிப்பதேயாகும். இந்த நீண்டவரிசையில் வீரகத்திபிள்ளையார் கோவில் மேலுமொரு சாட்சியமாகும். 1983 ஜுலை இனக்கலவரத்தை அடுத்து கோவில் பரிபாலகர் கணேசலிங்கம் வீரகத்திபிள்ளையார் கோவில் எதிர்கொண்டுவரும் நெருகக்கடிகள் தொடர்பாக திருக்கோணமலை நகராட்சி மன்றம் முதல் நாட்டில் பதவிவகித்த ஜனாதிபதிகள்வரை குறிப்பாக இந்துகலாச்சார அமைச்சர்களுக்கும் பலதடவைகள் முறையீடுகள் செய்தும் எதுவிதமான பலனும் இதுவரை கிடைக்கவிலலை. கோவில் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் .கு;தகை வழங்காமை. சட்டவிரோத உறுதிகள் தயாரிப்பு போன்றவற்றுக்கெதிராக கோவில் சார்பாக தெடரப்பட்ட வழக்குகளில் கோவிலுக்கு சார்பாக தீர்ப்புகள் வழங்கப்பட்ட போதும் அவைஎவையுமே நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை. ஆகமொத்தத்தில் இத்தகைய ;நிலமைகளானது ஈழத்தமிழர்கள் எதிர்காலத்தில் முகம்கொடுக்க வேண்டீய பாரியசவால்களாகவே கருதவேண்டும்.

1 comment:

கானகம் said...

http://www.tamilhindu.com/2010/09/help-rebuild-srilankan-hindu-temples/

தமிழ்ஹிந்துவிலும் இதைப் பற்றிய கட்டுரை ஒன்று வந்திருக்கிறது.

Post a Comment

Search This Blog