Saturday, February 16, 2019



கற்றோரிடமும் தமிழ் கல்வி சமூகத்திடமும்   வினயமாக ஒரு வேண்டுகோள்  


ஈழம் வாழ் தமிழ்கல்வி மான்களே பல்கலை பேராசிரியர்களே பல்கலை மாணவர்களே உயர்கல்வி கற்கும் மாணவச் செல்வங்களே தங்களிடம் பணிவானதும் மிகமுக்கியமானதுமான வேண்டுகோள். 

ஒரு இனத்தின் இருப்புககும் மேன்மைக்கும் வெறும் அரசியல்வாதிகள் மட்டும் செயற்பட்டால் போதுமானதல்ல என்பதனை எமது வரலாறும் உலகநாடுகளினதும் வரலாறுகளும் கற்றுத்தந்துள்ளன. 
அதன் அடிப்படையிலேயே 1950களில் எமது கல்விமான்கள் ஆழமாகச் சிந்தித்து எமக்கென ஒரு தனியான பல்கலைக்கழகத்தினை நிறுவிடத் திட்டம் இட்டனர். 
ஆந்த அடிப்படையில்1957ல் ஒன்றுகூடி  தமிழ் பல்கலைக்கழக இயக்கம் என்ற ஒன்றை நிறுவி பரவலாக தமிழர்களிடமிருந்து பணத்தை பலவகைகளிலும் சேர்த்து ஈழத்தின் மையமான திருக்கோணமலையில் காணிகளை கொள்வனவு செய்து 1959ம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழகம் நிறவ  முதல்நிர்வாகக் கட்டிடம் ஒன்றிற்க்கு திருக்கோணமலை உள்துறைமுகவீதியில் உள்ள  ஐந்தேகால் ஏக்கர் நிலப்பரப்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. 
ஆதன் விரிவஞ்சி அதன் சுருக்கமான வரலாற்றை மறைக்கப்பட்ட உண்மைகள’ என்ற சிறுநூலில் உதிர்வு செய்துள்ளோம்.
தற்சமயம் எமது மக்கள் மத்தியில் காணப்படும் புல்லுரிவிகள் சிலரால் எமது உயரிய குறிக்கோளிற்க்கும் இருப்பிற்கும் தடையாக அதன் அசையும் அசையா செத்துக்களை சூறையாடியுள்ளதுடன் மிகுதியையும் சுருட்டும் நிலையில் உள்ளனர்.இந்த நாசகார செயலில் இருந்து தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தின் சொத்துக்களை மீட்டெடுத்து அமதனை எமது எதிர்கால சந்ததியினரின் கலவி மேம்பாடடுக்காக மீளக்கட்டியெழுப்ப வேண்டியது ஈழத்தமிழர் ஒவ்வருவரதும் தலையாய கடமையாகும். 
ஆகவே இந்த நல்நோக்கத்துக்காக எமது இருப்பையே கேள்விக் குறி ஆக்கியவர்களிடமிருந்து மீட்டெடுத்து “தமிழ் பல்கலைக்கழக இயக்கம”; எந்த நேக்கத்துக்காக நிறுவப்பட்டதோ அந்த வழியிலேயே அதனை பயன்டுத்தி,கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான போர்சூழலில் அனைத்தையும் இழந்து நிற்கும் எமது எதிர்கால சந்ததியினரான தமிழ் மாணவ மாணிக்கங்களின் கல்வியை நிலையாக இருந்து காப்பற்றிட நிரந்தர புலமைபரிசில் நிதியம் ஒன்றை நிறுவிட நாம் எல்லோரும் ஓன்றுபட்டு கோடரிகாம்புகளிடம் இருந்து ‘தமிழ் பல்கலைக்கழக இயக்கம’ என்னும் மாபெரும் விருட்சத்தை பாதுகாத்திட வேண்டும்.
இழந்தவற்றை மீட்டும் எஞ்சியவற்றை பாதுகாத்து காப்பாறு;றுவது எம்மனைவரதும் தலையாய பொறுப்பாகும். எமது தலைவர்கள் என்ற நம்பிக்கையில் எமதுமக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து  பாராளுமன்றம் ஆனு;பிவைத்த எமது பிரதிநிதிகள் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் புறந்தள்ளி,  பதவி சுகங்கiளுகு விலைபோய் எமக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளுக்கும் மூலவிசையாக செயல்பட்ட இனவாத சக்திகளின பதவியை பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்திலும் நீதிமனறத்திலும் ஆக்ரோசத்துடன் போராடும் கன்றாவியை பார்த்து கண்ணீர்வடிக்கும் கையறுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது பிரச்சினைகளுக்கு நம்கையே நமக்குதவி என்ற ;முதுமொழிக்கமைய எமது பிரச்சினைக்ளுக்கு தீர்வுகாண நாமே வீதிக்கிறங்கி போராடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்
ஆகவே நாம் எமது உறங்கு நிலையிலிருந்து விடுபட்டு நியாயமான தேவைகளுக்காக ஒன்றிணைந்து செயற்பட திடசங்கற்பம் பூண்டு ஆவன செய்ய  முன்வருமாறு வேண்டி நிற்பதுடன் எமக்காக போராடி தமது இன்னுயிரை தியாகம் செய்த தியாக செம்மல்களின் தியாகத்தை பெறுமதி மிக்;கதாக்கவும் அவர்களின் ஆத்மசாந்திக்காவும்  உழைத்திட முன்வருமாறு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி 
இவ்வண்ணம்
தமிழ் பல்கலைக்கழக இயக்க மறுமலர்ச்சி அமைப்பு சார்பாக

(பூ.சந்திரகுமாரன்)
ஒருங்கிணைப்பாளர் சார்பில் 

No comments:

Post a Comment

Search This Blog