குரல் --02
“ அன்னசத்திரம் ஆயிரம்கட்டல் ஆலயம்பதினாயிரம் நாட்டல் இன்னும் ஆயிரம் புண்ணியம்கோடி
ஆங்கோர் ஏழைக்எழுத்தறிவித்தால் “ -சுப்ரமணியபாரதியதர் -
துரோகிகளின் கையாடல்களில் இருந்து தமிழ் பல்கலைக் கழக இயக்கத்தின் பொதுசு; சொத்துக்களை மீட்டெடுப்போம்!ஏழை எளிய தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக நிரந்தர புலமைப்பரிசில் நிதியம் ஒன்றை நிறுவுவோம்!
இழப்புகளும் ஏமாற்றுகளும் துரொகங்களுமே தமிழர்களின் வரலாறாக இருக்கக்கூடாது
இருக்கவும் முடியாது!
தமிழ்மக்;களின கல்வி, அறிவியல், கலாச்சார வேட்கைகளை நிறைவேற்றி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்கள் மத்தியிலான கல்விமாhன்ககள், புத்திஐPவிகள், இனப்பற்றாளர்கள், அரசியல் தலைவர்கள் ஒன்றியைந்து முன்வைத்த வேண்டுகோளை ஏற்று ,நாடுதழுவியரீதியில் தமிழ்மக்கள் பெருந்தொகையான நிதியை வாரிவழங்கியிருந்தனர்.மறுபுறமாக அரச மற்றும் தனியார்துறையில் பணியாற்றிய தமிழ் ஊழியர்களும், சிறுவியாபாரிகள் மற்றும், பெரும்வர்த்தகர்கள் த.ப.க.இயக்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து தத்தமது வசதிக்கேற்ப மாதாந்த நன்கொடை வழங்கியிருந்தனர். இந்த நிலைமையானது தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் தேவைக்கும் அதிகமாக நிதியை குவித்தது. அன்றைய பிரதான தமிழ்கட்சியான தமிழரசுக் கட்சியின் தாயகக் கோட்பாட்டுக்கு இணங்க வடக்கு,கிழக்கு மாகாணங்ளளுக்கு மத்திய பிரதேசமான திருக்கோணமலையில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவுவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறாக சேகரிக்கப்பட்ட பணத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்க்கு தேவையான நிலத்தை ஆகக்குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்காக திருக்கோணமலை பிரமுகர்களை உள்ளடக்கியதான திருககோணமலை பிரதேச பல்கலைக்கழகச் சபை அமைக்கப்பட்டது இச்சபையில் திருக்கோணமலை பிரமுகர்களான அமரர்.இராஐவரேதயம், முன்னாள் பா.உ, திரு, வி.நவரத்தினராஐh (னு.சு.ழு), திரு, செல்லத்துரை, (ஒலிவர்), திரு, மூகாந்திரம் முத்துக்குமாரு ,,தற்போதைய திருக்கோணமலை மாவட்ட பாராளுமனற .உறுபு;பினர் .இரா.சம்மந்தன் திரு இராமநாதன், (மூட்டைபூச்சி) திரு. ஆறுமுகநாதன் (ஏற்றுமதி இறக்குமதி துறைவர்த்தகர);, ஆகியோருடன் வேறுசிலரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இவரகள் முலமாக தமிழ்பல்கலைக்கழகம் நிறுவுவதற்க்கு பொருத்தமான நிலங்களாக அடையாளம் காணப்பட்ட உள்துறைமுக வீதி பகுதியில் 5ஏக்கரும் உப்புவெளி பிரதேசத்தில் 83ஏக்கர் நிலங்களையும் திருக்கோணமலையில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவிட ஆகக்குறைந்த விiயாக ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம்ரூபா விகிதம் மேற்படி நிலங்களை த.ப.க.இயக்கத்துக்கு வழங்க முன்வரவேண்டும் என திருக்கோணமலை பிரதேச பல்கலைகலைக்கழகச்சபை பிரமுகர்களால் நிலச்சொந்தக்காரர்களுக்கு வேணடுகோள் விடுக்கப்பட்டது தமிழ் பல்கலைக்கழக இயக்கம் மீதாக நம்பிக்கை கொண்டிராத நிலச்சொந்.தக்காரர்கள் தமது நிலங்களை பல்கலைக்கழக இயக்கத்துக்கு விறபனை செய்ய மறுத்தனர். தமிழ் பல்கலைக்கழகம் நிறுவப்படாத பட்சத்தில் நிவத்துக்காக பெற்ற பணத்துடன் அதற்கான வங்கி வட்டியையும் த.ப.க.இயக்கத்துக்கு செலுத்தி தமது நிலங்களை மீளப்பெற்றுக் கொள்ளமுடியும் என்ற உத்தரவாதம் த.ப.க.இயக்கத்தால் வழுங்கப்பட்டதை அடுத்தே த.ப.க.இயக்கத்துக்கு தமது நிலங்களை விற்பனை செய்ய நிலச்சொந்தக்காரர்கள் உடன்பட்டிருக்கின்றனர். இவ்விதமாக கொள்வனவு செய்யப்பட்ட உள்துறைமுக வீதி ஐந்தேக்கர் நிலத்தில் 1959 சித்திரை மாதம் 27ம் நாள் பெருத்த எடுப்பில் தமி;ழ் பல்ககை;கழகத்துக்கான கல்நாட்டு விழா வெகுவிமரிசையாக நநடைபெற்றது.
தமிழ் மக்களின தூரதிர்~டம் 1966இல் பதவியில் இருந்த யூ.என்பி தமிழரசுக்கட்சி கூடடு தேசிய அரசாங்கம் தனியார் பல்கலைக் கழகம் நிறுவுவதை தடைசெய்தது இத்தடையை அடுத்து த.ப.க.இயக்கம் உப்புவெளி 83ஏக்கர் நிலத்தில் கமத்தொழில் கால்நடைவளர்ப்பு செயலமுறை பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவியது. இதனை உரிய முறையில் திட்டமிடப்படாததால் அதுகும் வெற்றியளிக்காத நிலையில் மூடுவிழா நடத்தப்ப்பட்டது. இந்தநிலையில் மேற்கொண்டு புதிய திட்டங்களை முன்னெடுக்க த.ப.க.இயக்கத்திடம்; நிதியின்றிவங்கறோத்து நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலமையை சரிசெய்ய உப்புவெளி நிலங்களை உரியவர்களுக்கே படிப்படியாக விற்று கல்வி சார்ந்த புதிய முயற்சிகளை ஆரம்பிப்பதுஎன்றமுடிவைத்தவிர மாற்று தீர்வொன்று, த.ப.க.இயக்கத்தின் முதியதலைமைக்கு இருக்கவில்லை. இந்த துன்பகரமான நிலைமையில்நிலத்தை விற்பது என்ற முடிவை கடுமையாக எதிர்த்த துடிப்பான இளம் உறுப்பினர்களின் முயற்ச்சியால் த.ப.க.இயக்கத்துக்கு மூத்த சட்டத்தரணி மா.கனகரெத்தினம் தலைமையில் புதிய நிர்லாகம் தெரிவுசெய்யப்பட்டது. காலியான கஐhனாவுடன் த.ப.கஇயக்கத்தை பொறுப்பேற்ற மூத்த சட்டத்தரணி அமரர் மாணிக்ஸ் கனகரெத்தினம் (மாணிக்ஸ்) தலைமையிலான புதிய நிர்வாகம் தமிழ் பல்கலைக்கழக இயக்கத்துக்கு சொந்தமான திருக்கோணமலை உப்புவெளியில் அமைந்துள்ளதுமான 83 ஏக்கர் நிலப்பரப்பில் த..ப.க.இயக்கத்தின் கமத்தொழில் கால்நடை வளர்ப்பு செயல்முறை பயிற்சிகிலையத்தை புனரமைத்து இயங்கவைக்கும் பொறுப்பை த.ப.க.இயக்க செயற்குழு உறுப்பினரான பிரபல சட்டத்தரணி எல.ஏ.ரி.வில்லியம்ஸிடம் ஒப்படைத்தது த.ப.க.இயக்கத்தின் உப்புவெளி பயிற்சி நிலையத்தை பொறுப்பேற்ற எல்.ஏ.ரி.வில்லியம்ஸ் அதனை புனரமைக்க தேவையான நிதியை சேகரிப்பதற்காக த.ப.க.இயக்கத்தின் பயிற்சி நிலையத்தை முன்நிறுத்தி மாதாந்த கட்டணம் செலுத்தும் முதலீட்டுத் திட்டம் ஒன்றை ஆரம்பித்தார் அதாவது இரண்டாவது தடவையாகவும் த.ப.க.இயக்கம் பொதுமக்களிடத்தில் நிதி உதவி பெற்றது எனச்சொல்லலாம். இவ்வாறாக த.ப.க.இயக்கம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியிருந்த வேளைகளில் திரும்பிபாரக்க தயாரில்லாதவர்கள தற்போது த.ப.க.இயக்கத்தின் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு சொந்தம் கொண்டாடுவது படுபோக்கிரித்தனமும் பெரும் மோசடியுமாகும் இம்முதலீட்டு திட்டத்தில ஆகக்குறைந்த தொகை ஐந்து ரூபாயாகும் எல்ஏ.ரி.வில்லியம்ஸ் தனது செந்த செல்வாக்கை பயன்படுத்தியும் பயிற்சிநிலையத்தின் நேக்கத்தை தெளிவுபடுத்தியும் பெரரும் தனவந்தர்களையும் பிரபலங்களையும் இந்த முதலீட்டுதிட்டத்தில் அங்கத்துவர்களாக சேர்த்திருந்தார் கொழும்பில் பிரபல கல்லூரியொன்றில் ஆங்கில ஆசிரியையான அவரது பாரியார் தனது ஆசிரிய நண்பர்களையும் ஆவரகள் மூவமாக Nறுபலரையும் ஆகக்குறைந்த ஐந்து ரூபாய் முலீட்டுத்திட்டத்தில் சேர்த்துpருந்தார்(முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள த.ப.க.இயக்கத்தின் வரலாற்று சுருக்கத்தை வெளிப்படுத்தும் “மறைக்கப்பட்ட உண்மைகள்” என்ற நூலை வாசிக்கவும்)உப்புவெளி பயிற்சிநிலைய பண்ணை வில்லியம்ஸ் தலைமையில் சிறப்பாக இயங்கத்தொடங்கியதை அடுத்து மா.கனகரத்தினம் தலைமையிலான நிர்வாகசபை உறுப்பினர்கள் சொந்த தேவைகள் காரணமாகவும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதினாலும் தங்களைமீண்டும் நிர்வாகசபைக்கு தெரிவுசெய்ய வேண்டம் என பொதுசபை கூட்டத்தில் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக த.ப.க.இயக்கத்தின் பொதுச்சபை உறுப்பினர்களால் புதியவர்கள் நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்ஃ புதியநிர்வாக சபை உறுப்பினர்கள் சொலமன் அருளானந்தம் டேவிட்டின் ஆலோசனைப்படி உப்புவெளி பயிற்சி நிலையத்தில் மேற்கொண்ட மாற்றங்கள்எல்.ஏ.ரி.வில்லியம்ஸ் முன்னெடுத்த நிகழ்ச்சிநிரலுக்கு. இடையூறாக மாறியதால், த.ப.க.இயக்த்தின் பயிற்சி நிலைய பணிப்பாளர் பதவியில் இருந்நும் அவர்வகித்த ஏனைய பொறுப்புகளில் இருந்நும் விலகிக்கொண்டார். இதை அடுத்து உப்புவெளி பயிற்சி நிலையத்துக்கு புதிய பணிப்பாளராக பொறுப்பேற்ற சொ.அ.டேவிட்தலைமையில் இடம்பெற்ற சீரற்ற நிர்வாகத்தால் உப்புவெளி பயிற்சிநிலையம் அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டது. இந்த சூழுலையும் யுத்தநெருக்கடிகளையும் பயன்படுத்தி த.ப.க.இயக்கத்தின் ஏழுஉறுப்பினர்களை கொண்ட தர்மகர்த்தா சபையின் உறுப்பினர்களில் ஒருவரான நா.கிறி~;ணதாசுனுடனும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாருடனும்திருக்கோணமலையில் உயர்பதவிகள் வகித்த சில ஊளல் மோசடி பெருச்சாளிளளும்கூட்டு சேர்ந்;து த.ப.க.இயக்கத்தக்கு சொந்தமான பல கோடிக்கணக்கான ரூபகய்கள் பெறுமதியுள்ள அசையும் அசையா ( உப்புவெளியிலும் திருகோணமலை நகர்பகுதியில் 05 ஏக்கருமாக சேர்த்து கிட்டத்தட்ட 91ஏக்கர் நிலங்கள் அடங்கலாக) மேசடியாக கையாடலுக்கு இலக்காக்கியுள்ளனர். அதாவது பேரினவாதம் தமிழர்களுக்கு செய்ய துணியாத துரேகத்தை ஈழப்போராளிகளாக தம்மை அடையாளப்படுத்தி ஆயுதம் ஏந்தியவர்கள் பேரினவாதத்தை கவசமாக பயன்படுத்தி இந்த மாபெரும் துரோகத்தை செய்திருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி மேற்குறிப்பிட்டுள்ள தீயசக்திகள் இலங்கை தமிழர் வரலாற்றில் ஒன்றுபட்டதமிழ் மக்கள் தங்களிடத்தில் தாம் கொண்டிருந்த நம்பிக்கையை பறைசாற்றும் அடையாளச் சின்னமான த.ப.க.இயக்கத்துக்கு சொந்தமான பொது நம்பிக்கை சொத்துக்களான 91 ஏக்கர் நிலங்களில் உப்புவெளி பகுதி 86 ஏக்கர நிலத்தில் ஒருபகுதியை மோசடியாக விற்பனைன செய்தது போகஎஞ்சியநிலங்களையும் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் திரைமலறவவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே உப்புவெளி பகுதியில் மோசடியாக வி;ற்பனை செய்யப்பட்டநிலங்களை வாங்கியவர்கள் தங்களுக்கு சட்டபூர்வமான அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி நிரந்தர கட்டிடங்களை அமைக்க ஆரம்பித்துள்ளனர் மறுபுறமாக 1959 சித்திரை மாதம் 27ம் நாள். தமிழ் பல்கலைக்கழகத்துக்கு அத்திவாரக்கல் நாட்டப்பட்ட திருக்கோணமலை உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள ஐந்தேக்கர் நிலப்பரப்பில் ஓரு ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை“சண்முகா தர்ம ஸ்தாபனத்திற்கு நா.கிறி~;ணதாசன், மு.சந்திரகுமார் கும்பல் சட்டத்துக்கு பறம்பாக ஒதுக்கியுள்ளுனர். இங்கு கவனிக்கத்தக்கது என்னவெனில் சண்முகா தர்மஸ்தாபனத்தின் தரமகர்த்தா நா.கிறி~;ணதாசன் என்பதாகும்“சண்முகா தர்மஸ்தாபனத்துக்கு” சொந்தமானதும் திருக்கோணமலை வித்தியாலயம் வீதியிலும், உப்புவெளியிலும் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள் அமைந்திருந்த நிலத்தை ஏப்பம் விட்டுவிட்டு சண்முகா தர்மஸ்தாபனம்“லயன்ஸ்கழகத்திடம”; ஓப்படைக்கப் பட்டுளள்துடன் சிறுவர் இல்லத்தை நிறுவுவதற்காக “சண்முகா தர்மஸ்தாபனத்தை” முன்நிறுத்தி“தமிழ் பல்கலைக்கழக இயக்கத்துக்கு” சொந்தமான உள்துறைமுக விதி ஐந்தேக்கர் நிலத்தில் நா.கிறி~;ணதாசன் அபகரித்த ஓரு ஏக்கருக்கும் மேற்ப்பட்ட நிலப்பரப்பை “லயன்ஸ கழகத்திடம்” ஒப்படைக்கப்பட்டுள்ளது.. இங்கும் பெரும் மோசடி இடம்பெற்றிருக்கிறது. மோசடிகளை மூடிமறைக்க கவசமாக “லயன்ஸ் கழகம்” பயன்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக த.ப.க.இயக்கத்துக்கு சொந்தமான உள்துறைமுக வீதி நிலத்தின் ஒருபகுதியில் அமைக்கப்பட்டுள்ள“இந்துகலாச்சார மண்டபத்தை;” பார்ப்போம்.. உள்துறைமுக வீதி நிலத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு பிரத்தியோக வகுப்கு நடாத்த போவதாகவும், அதற்கு Nவையான கட்டிடம் ஒன்றை நிறுவதற்கு தேiவையான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக, த.ப.க.இயக்கத்துக்கு சொந்தமான ஊப்புவெளி நிலப்பரப்பில் மூன்று ஏக்கர் நிலத்தை 350,000க்கு“சிலனிஸ் பிறதேஸ் சென்யோசப் சங்கம்” தொழில்நுட்ப பயிற்சி நிலையம்”ஒன்றினை நிறுவுவதற்காக விற்பனை செய்வதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் அனுமதிகோரி த.ப.க.இயக்கத்தின் தர்மகர்த்தாக்கள் சபை பொதுநல வளக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர்.. ஆரம்பத்தில் தர்மகர்த்தா சபையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிமன்றம் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி தர்மகர்த்தாக்கள் சபைக்கு உத்தரவிட்டதுடன் தொழில் நுட்பபயிற்சி நிலையம் நிறுவுவதற்காக நிலத்தை கொளவனவு செய்வதற்கான பணத்தை நீதிமன்றில் வைப்புசெய்ய உத்தரவிட்டு தவணை போடப்பட்டது. அடுத்த தவணையின்போது த.ப.க.இயக்கத்துக்கு நிலங்களை விற்பனை செய்தவர்களில் ஒருவர் தனது சட்டத்தரணி முலம் தம்மால் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவுவதற்காக ஆகக்குறைந்த விலையில வழங்ப்பட்ட நிலங்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதை எதிர்ப்பதாக தனத ஆட்சேபனையை நீதிமன்றுக்கு தெரிவித்தார். இந்த ஆட்சேபனையை கவனத்தில் கொண்டும்,. தரம்மகர்தா சபைசார்பில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையாலும் ஏற்கெனவே வளங்கப்பட்ட விற்பனைக்கான அனுமதியை ரத்துசெய்தும், நிலக்கொள்வனவுக்காக நீதிமன்றில் வைப்புச்செய்யப்பட்ட பணத்தை“சிலனிஸ் பிறதர்ஸ் சென்யோசப் சங்கத்தினரை” மீளப்பெறும்படியும் நீதிமன்று உத்தரவிட்டது. இந்தவழக்கில் தர்மகர்த்தாக்கள் சபையினராலேயே கல்வி தொடர்பான விடயங்கள்தவிர வேறுஎந்த தேவைக்கும் த.ப.க.இயக்கத்திற்க்கு சொந்தமான நிலங்களை பயன்படுத்த முடியாது என்பத உறுதி செய்யப்பட்டுள்ளது
விற்பனையை நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து; “சிலனிஸ் பிரதர்ஸ் சென்யேசப் சங்கத்தின் ஏற்பாட்டில் ஏற்கெனவே பேசப்பட்ட 350,000 ரூபாய்க்கு மூன்று ஏக்கர் நிலத்தை கன்னியாஸதிரிகளள் சங்கத்துக்கு ஏற்கெனவே பொருந்நிக்கொண்ட விலைக்கு 99வருட குத்தகைக்கு கிறி~;ணதாசன் சொ.அ.டேவிட் கும்பல் மறமுகமாக அதேநிலத்தை விற்பனை செய்துள்ளார்கள். அதாவது 99வருடங்ளுக்கு பின்னர் நிலத்தை மீளபெற்றுக் கொள்ள எவரும் இல்லை என்ற உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட “கன்னியாஸ்திரிகள் சங்கம்” நிலத்தை நுறுவருட குத்தகைக்கு கொண்டதாக தெரியவருகிறது. இவ்வாறாக பெற்ற பணத்தில்’ உள்துறைமுக வீதி நிலத்தில் “கல்யாணமண்டபம்” என்ற பெயரில் மண.டபம் ஒன்று கட்டப்பட்டது. கல்யாண மண்டபத்தை கட்டிமுடிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை ஆகியவற்றிடமிருந்தும் நிதி உதவிகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. “கல்யாணமண்டபம” புலம்பெயர் சமூகத்திடமிருந்து நிதி உதவிகளை பெறுவதில்ப பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தமையால் கல்யாணமண்டபத்திற்கு முன்பக்கத்துடன் இணைந்ததாக இந்துசமய கோபுரம் ஒன்று அவசர அவசரமாக அமைக்கப்பட்டு “இந்து கலாச்சார மண்டபமாக” பெயர்மாற்றம் செய்யப்பட்டு இயங்கிவருகிறது கிட்டத்தட்ட 25வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இந்த மண்டபத்தின் வாடகை வருவாய் மற்றும் புலம்பெயர் சமூகத்திடமிருந்து பெறப்படும்; பெரும் தொகையான உதவிகள் எந்க வங்கி கணக்கில் வைப்பில் இடப்படுகிறது? இந்த கணக்கை கையாள்பவர் யார்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு திருக்கோணமலை தமி;ழ் மக்கள் பதில்தேடி முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள. தமிழ் மக்களின் சுயாதீனமான ளு .ஏழை எளிய தமிழ் மாணவரகளின் கல்வி மேம்பாட்டுக்கு உரித்தான தர்மசொத்துக்கள் ஊளல், மோசடி பேர்வளிகளின் கையாடலில் இருந்து மீட்கப்பட்டு 30வருடகால உள்நாட்டு யுத்த பேரழிவுகளுக்கு மத்தியில் நாடோடிகளாக தாயகமண்ணின் காவலர்களாக இருந்த தமிழ்மக்களது பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக த.ப.க.இயக்கத்தின் சொத்துக்களும் அவற்றின் வருமானங்களும் நிரந்தரமனதும் சட்டபூர்வமானதுமான புலமைபரிசில் நிதியமாக்ப்பட வேண்டும். அந்த உயரிய பணியை நிறைவேற்றி முடிக்க தமிழ் மக்கள் மத்தியிலான இனப்பற்றாளர்கள், புத்திஐPவிகள், பல்கலைக்கழக சமூகத்தினர், மாணவர்கள், பெற்றோர் மற்றும் தாயகம் வாழ் ஏழை எளிய மாணவவர்களின் கல்வி மேம்பாட்டில் அக்கறை கொண்ட புலம்பெயர் சமூகத்தினர் ஒண்றிணைந்து செயற்படவேண்எயது காலத்தின் கட்டாயமாகும்.
-ஊண்மைகள் தொடரும-;
.இத்துண்டுபிரசுரம் த.ப.க .இயக்க புனரமைப்பை வலியுறுத்தும் த.ப.க.இயக்கத்தின் மறுமலர்ச்சி அமைப்பு சார்பில் நிலாவெளி கோபாலபுரத்தைச் சேர்ந்த பூ.சந்திரகுமாரன் ஆகிய என்னால் வெளியிடப்பட்டது
No comments:
Post a Comment