“வடபகுதியில் இடதுசாரி இயக்கம்” கட்டுரை பற்றிய அறிமுகம்!
பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த நமது நாட்டை விடுதலை செய்துதாம் ஆள வேண்டும் என விரும்பிய நம்நாட்டு முதலாளிகளும், நிலபிரபுக்களும் இலஙகை தேசிய காங்கிரஸ என்ற ஸ்தாபனத்தை 1920களில் ஆரம்பித்து அதனூடாக தமது அரசியல் வேலைகளை ஆரம்பித்தார்கள். முதலில் ஏ. டபிள்யூ.பெரேரா, பொன்னம்பலம் இராமநாதன், ஜேம்ஸ்பீரிஸ், பொன்னம்பலம் அருணாசலம், போன்றோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்தாபனத்தில் பல சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் இணைந்து அந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கினார்கள். இவர்களில் முக்கியமாக குறிப்பிடக்கூடியவர்கள் டி.எஸ்.சேனாநாயக்கா, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, சேர் ஜோன் கொத்தலாவல, ஒலிவர் குணதிலகா ஆகியோர் ஆவார்கள்.
அதேவேளை சமகாலத்தில் மற்றுமொரு முதலாளித்துவ பிரிவில் இருந்து லண்டன் ஒக்ஸ்போட், கேம்பிரிஜ் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று நாடுதிரும்பிய பெரும்பணக்காரர்களின் பிள்ளைகளான என்.எம்.பெரேரா, பிலிப்குணவர்த்தனா, எஸ்.ஏ.விக்ரமசிங்க, பீட்டர் கெனமன், கொல்வின் ஆர்.டி.சில்வா, லெஸ்லி குணவர்த்தனா, பொன் கந்தையா, ஏ.வைத்திலிங்கம், றொபேர்ட் குணவர்த்தனா போன்றோர் மாக்ஸிஸ்ட்டுகளாக திரும்பியிருந்தனர். இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து 1935இல் லங்கா சமசமாஜக் கட்சி என்ற ஒன்றை அமைத்து வௌளையனே வெளியேறு இலஙகை இலங்கையருக்கே சொந்தம், எம்மை நாமே ஆளவேண்டும், பிரித்தானிய ஏகாதிபத்தியமே வெளியேறு,, எமது நாட்டில் பாட்டாளிவர்க்க ஆட்சியை ஏற்படுத்துவோம், உலக பாட்டாளிவர்க்கத்தின் ஐக்கியம் நீடூளிவாழ்க, என்ற சுலோகங்களை முன்வைத்து செயல்பட ஆரம்பித்தனர். நாடு முழுவதும் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் இணைத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக பல போராட்டங்களையும், சட்டமறுப்பு போராட்டங்கள், வேலைநிறுத்தங்களையும் நடத்தினர். பிரித்தானிய ஆட்சியில் தொழிற்சங்கங்களும் அவற்றால் நடாத்தப்படும் போராட்டங்களும் சட்டவிரோதமானதும் தண்னைக்குரிய குற்றமாகும்.
1939 செப்டம்பரில் இரண்டாவது உலகயுத்தம் வெடித்த்து. ஹிட்லரின் ந்ஜிப்படைகள் போலந்து நாட்டின் மேற்கு பகுதியை சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறியது. உடனேசோவியத் ரஷ்யபடைகள் போலந்தின் கிழக்கு பகுதிக்குள் ஜேர்மன் படைகளின் முன்னேற்றத்தை தடைசெய்தனர். இவ்விடயம் தொடர்பில் லங்கா சமசமாஐக் கட்சிக்குள் பெரும்விவாதம் நடந்த்து. ரஷ்யா கிழக்குபோலந்துக்குள் ஊடுருவியது மிகப்பெரிய தவறு என ல.ச.ச.மாஐக் கட்சியின் தலைவர்களில் பாதிப்பேர் கூறினர் இவ்வாறூ கூறியவர்கள் ரொக்ஸிஸ்ட்டுகளாவர் அவர்கள் சோவியத் ரஷ்யாவை ஆக்கிரமிப்பு நாடு எனக. கூறினர் ரஷ்ய அதிபர் ஸ்டலினும் ஒரு எதேச்சாதிகாரி என்றும் அவர் மாக்ஸிஸ்ட் லெனினிஸ்ட் அல6ல என்றும் ரொக்ஸிதான் மபெரும் மாக்ஸிஸ் லெனினிஸ்ட் எனக்கூறி வாதிட்டனர். பாதிப்பேர் ரஷ்ய ஊடுருவல் சரியானது என வாதிட்டனர். சரியென வாதிட்டவர்கள் கம்யூனி.ஸ்ட்டுகளாவர். இதனால் லங்கா சமசமாஐக் கட்சிக்குள் பிளவு ஏற்ப்பட்டு அக்கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகள் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் ஐக்கிய சோஷலிசக் கட்சி என்ற ஒன்றை அமைத்து செயல்பட்டு வந்தார்கள். இக்கடசி மூன்று ஆண்டுகள் செயல்பட்டது. 1943 ஜூலை 3ஆம் திகதி அக்கட்சியை கலைத்து விட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை. ஆரம்பித்து இலஙகை கம்யூனிஸ்ட் கட்சியாகவே செயல்பட்டு வருகிறார்கள்
இலஙகை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால தலைவராக டாக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்கவும் பொது செயலாளராக பீற்ரர்கெனமனும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களாக பொன்.கநதையா, ஏ.வைத்திலிங்கம், ஆரியவன்ஸ குணசேகரா, என்.சண்முகதாஸன், எம்.கார்த்திகேசன், எம்.ஜி.மென்டீஸ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். லங்கா சமசமாஐக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஓரளவு பலமான சக்திகளாக வளர்ந்து வந்தன. எனவே அதனை ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் வடபகுதிக்கு (யாழ்ப்பாணம்) 1945 ஆம் ஆண.டு தோழர் கார்த்திகேசனை அனுப்பிவைத்த்து. அன்று தொடக்கம் கம்யூனிஸ்ட் கொளகையின் அடிப்படையில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட’டது. 1935 ஆம் ஆண்டு தொடக்கம் மாக்ஸிஸம் லெனினிஸம் இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக வடபகுதியில் சிறுபகுதி மக்கள் மாக்ஸிஸ லெனினிஸ கொளகைகளைப்பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள்., சிலர் அதன் ஆதரவாளர்களாகவும் இருந்து வந்தார்கள். அவர்களின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனரீதியாக காலூன்றியது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தி அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்கள் நடத்திவந்த உரிமைகளுக்கான சாத்வீக போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துவந்தது. ஆனால் உரிமைகள் வெனறெடுக்கப்படவில்லை.அதற்கு சரியான வழியும் காட்டப்படவில்லை. இச்சந்தர்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாடு கூட்டப்பட்டது.
1964 ஐனவரியில் கூட்டப்பட்ட 7வது மாநாடு, சோவியத் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியினால் முன்வைக்கப்பட்ட முதலாளித்துவத்துடன் சமாதான சகஜீவனம், உடனிருந்து வாழும் கொள்கை, பாராளுமன்றம் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும்பாதை ஆகிய திரிபுவாதபாதைளை முற்றாக நிராகரித்தது. ஆயுத பலாத்காரத்தால் அரச அதிகாரத்தை கைப்பற்றுவது. புரட்சியின் மூலம் சுரண்டல் அமைப்பை இல்லாதொழிப்பத்து, சோஷலிஸத்தின் மூலம் முதலாளித்துவ சமுதாயத்தை அழித்தொழிப்பது ஆகிய புரட்சிர கொள்கைகளை மாநாடு ஏகமனதாக அங்கீகரித்த்து. இவற்றிற்க்கு தலைமைதாங்க தோழர் என்.சண்முகதாசனை அவர்களை நியமித்து அவரை கட்சியின் பொதுசெயலாளராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
1966ஆம் ஆண்டு தோழர் சண்முகதாசனின் வழிகாட்டலின் கீழ் ஆலயப்பிரவேசப் போராட்டம், தேனீர்கடை பிரவேச போராட்டம், பொது கிணறுகளில் தண்ணீர் அள்ளும் போராட்டம் இவ்வாறு பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. எதிரிகளின் பலாத்காரத்துக்கு எதிரான பலாத்கார போராட்டங்கள் நடைபெற்று மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன் கோவில், செல்வசந்நிதி கோவில், பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வர்ர் கோவில் போன்ற பிரசித்திபெற்ற கோவில்கள் நான்கு வருட தொடர்ச்சியான போராட்டங்களின் பின் தாழ்த்தப்பட்ட மக்க்ளுக்கு சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. இதேபோல் சங்கானை, நெல்லியடி, சாவகச்சேரி, அச்சுவேலி, உரும்பிராய், போன்ற இடங்களில் நடந்த் தேனீர்கடை பிரவேச போராட்டங்களின் வெற்றிகள்ல் வடபகுதி பூராவும் அனைத்து தேனீர் கடைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவமாக திறந்துவடப்பட்டன..இப்போராட்டங்களின் பிரதிபலனாக கம்யூனிஸட் கட்சியும் அதன் வாலிபர் இயக்கமும் பெரும் சக்தியுடன் வளரத்தொடங்கியது.
1976இல் தமிழர் விடுதலை கூட்டணியின் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தனி தழிழ்ஈழம் என்ற பிரகடனம் முழுதமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் பெரும் நாசத்தை ஏற்படுத்தியது.அத்தீர்மானம் 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரத்துக்கு வழிவகுத்த்து.. கொழும்பையும் அதனை அண்டிய பிதேசங்களிலும் வாழுந்துவந்த முழு தமிழ் மக்களுக்கும் பேரழிவுளை ஏற்படுத்தியதுடன் பல நூறு தமிழர்களின் உயிர்களையும் காவுகொண்டது..இதனால் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தமிழ் ஈழம்தான் ஒரேவழி என்ற முடிவுக்கு வநது கடந்த 26 வருடங்களாக இலஙகை ஆயுதப்டையுடன் யுத்தம் செய்து ,இறுதியில் தோல்வி கண்ட நிலையில், இனி என்ன செய்வது என சிந்திக்கின் வேளையில் வடக்கில் இடதுசாரி இயக்கம் என்ற இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. இக் கட்டுரையில் கூறப்படும் கருத்துக்களும் அனுபவங்களும் குறிப்பாக தமிழ் வாலிபர்களின் எதிர்கால போராட்டங்களுக்கு உதவியாக அமையலாம் என் நம்புகின்றோம்.
நன்றி
எம்.ஏ.சி.இக்பால்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேச முன்னாள் செயலாளர்.
நன்றி முழக்கம்
No comments:
Post a Comment