gwpNghFk; fd;dpah nte;ePH Cw;W gpuNjrKk; fz;%b nksdpj;jpUf;Fk; gpiog;Gthj jkpo; murpay; jiyikfSk;!
gp.v];.Fkhud;
கன்னியா வரலாற்று சுருக்கம் இராவண மன்னன் இறந்த தனது தாயாரின் 31 வது நாள் அந்தியேட்டி கிரியைகளை செய்வதற்காக உருவாக்கியதே கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் என்பது வரலாறு இதனை அடிப்படையாக கொண்டே இந்துக்கள் இறந்தவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகளை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் நிறைவேற்றி வருவது ஐதிகம். பிரித்தானிய கவனித்துவ காலத்தில் பிரித்தானியா ஆட்சியாளரால் திருக்கோணமலை பிரதேசத்தின் பிரதான அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த வெள்ளையர் பொக்களிப்பான் நோயால் அவஸ்தைப்பட்ட சந்தர்ப்பத்தில் திருக்கோணமலை மடத்தடி மாரியம்மான் கோவில் பூசகர் அம்பாளின் அனுக்கிரகத்தால் அந்த வெள்ளைக்கார அதிகாரியை குணப்படுத்தியதற்காக வெள்ளைக்கார அதிகாரியால் மாரியம்மான் கோவிலுக்கு சன்மானமான கன்னி வெந்நீர் ஊற்றுக்கள் அடங்கலாக 17 ஏக்கர் நிலத்தை கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியில் 1827ல் வழங்கியிருந்தமை வரலாறு. அன்றில் இருந்து கன்னியா வெந்நீர் ஊற்றுக்களினதும் அங்கு அமைந்திருந்த பிள்ளையார் கோவிலனதும் பரிபாலனம் திருக்கோணமலை மடத்தடி மாரியம்மன் கோவில் மணியகாரர்களால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.
சண்முகா நம்பிக்கை நிறுவனம் கன்னியா வெந்நீர் ஊற்று அந்தியேட்டி கிரியைகளை செய்ய வரும் இந்துக்களுக்கு வசதியாக திருகோணமலை தம்பலகாமத்தை சேர்ந்த பெருந்தனவந்தர் ஸ்ரீமான் சண்முகம்பிள்ளை அவர்கள் அந்தியேட்டி கிரியை மடம் ஒன்றை நிர்மாணித்து உதவியதுடன் அதனை பராமரித்தும் வந்தார். அந்த நாட்களில் திருக்கோணமலையை சேர்ந்தவர்களும் அதனை அண்மித்த கிராமங்களில் வதியும் இந்துக்கள் அந்தியேட்டி கிரிகைகளை செய்வதற்கான முதல் நாளே தேவையான பொருட்களுடன் கன்னியா அந்தியேட்டி மடத்துக்கு வந்து அங்து தங்கி கிரியைகளுக்குரிய ஏற்பாடுகளை கவனிப்பதுடன் அந்தியேட்டிக்குரிய அன்னதானத்துக்கான சமையல் வேலைகளையும் இரவோடுஇரவாக முடித்து மறுநாள் காலையிலேயே திருக்கோணமலை ஆலடி விநாயகர் ஆலய சைவ குருக்களை அழைத்துவந்து அந்தியேட்டி கிரிகைகளை பூர்த்தி செய்வதுடன் கன்னியா கிராம வாசிகளை அழைத்து அன்னதானம் வழங்கி பூரண மனத்திருப்த்தியுடன் திருப்பிச் செல்வது வழக்கம். (இவ்விடயம் இக்கட்டுரையாளனாகிய எனது பாட்டன் ,பாட்டி ஆகியோரது அந்தியேட்டி கிரியைகளின் கண்ணுற்ற நேரடி அனுபவத்தின் அடிப்படையில் எழுதியதாகும்). ஸ்ரீமான் சண்முகம்பிள்ளை அவர்களின் மறைவுக்குப்பின் அவரது இல்லத்தரசி தங்கம்மாள் சண்முகம்பிள்ளை தனக்குப்பின் வாரிசற்ற தமது சொத்துக்களை மையமாகவைத்து உருவாக்கிய.தர்மஸ்தாபனங்கள் பலவற்றுடன் இந்த அந்தியேட்டி மடத்தையும் சேர்த்து “சண்முகா நம்பிக்கை நிறுவனம்” என்னும் தர்மஸ்தாபனத்தை ஸ்தாபித்துச்
அதனை நிர்வாகிக்க திருக்கோணமலை பிரமுகர்கள் சிலரை நம்பிக்கை பொறுப்பாளராக நியமித்திருந்தார். திருமதி தங்கம்மாள் சண்முகம் அவர்களால் சட்டப+ர்வமாக எழுதப்பட்ட சண்முகா நம்பிக்கை நிறுவன உயிலுக்கமைவாக கன்னியா வெந்நீர் ஊற்று மடத்தை நிர்வாகிக்கவும் பராமரிக்கவும் தேவையான வருவாயை பெற்றுக்கொள்ள ஏற்புடையதாக மூதூர் பிரதேசத்தில் சில ஏக்கர் வயல் நிலங்களையும் ஒதுக்கியிருந்தாக கூறப்படுகின்றது. இவ்வாறாக கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசம் தமிழர்களின் வரலாற்று உரிமையின் அடையாளமாக இருந்து வந்தது. காலப்போக்கில் நம்பிக்கை பொறுப்பாளர் சபையினர் அந்தியேட்டி மடத்தை சரியாக பராமரிக்க தவறியதனால் அந்தியேட்டி மடம் பாழடைந்து கவனிப்பாரற்று 1983 வரை இடிபாடுகளுடன் காட்சியளித்தது. உள்நாட்டு யுத்த சூழலில் மிகமோசமான நிலையில் காட்சியளித்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் அந்தியேட்டி மடம் இருந்த தடயமே இல்லாதவாறு புள்டோசரால் தரைமாக்கப்பட்டது. இப் புண்ணிய காரியத்தை செய்தவர்களின் கன்னியா பிரதேச சபையினர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சொந்த இனத் துரோகிகளே இந்த மடத்தை இருந்த இடம் தெரியாமல் புள்டோசரால் அழித்ததன் பின்னனியில் செயல்பட்டதாக கூறப்படுகின்றது. தற்போது சண்முகா நம்பிக்கை நிறுவன அந்தியேட்டி மடத்துக்குப் பதிலாக முன்னைய மடம் இருந்த இடத்திற்கு சிறிது தூரம் தள்ளியதாக பஸ்தரிப்பு போன்ற சிறு கட்டிடம் ஒன்றை கன்னியா பிரதேச சபை அந்தியேட்டி மடமாக நிர்மானித்து கொடுத்துள்ளது. மழைகாலத்தில் இந்த மடத்தில் அந்தியேட்டி கிரியைகள் செய்வது மிகக்கடினமான காரியமாகும்.
சண்முகா நம்பிக்கை நிறுவனத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினரான கிருஸ்ணதாசன் மாரியம்மான் கோவிலுக்கு உரித்தானதும் கோவில் மணியக்காரர்களால் நிர்வாகிக்கப்பட்டு வந்ததுமான பிள்ளையார் கோவிலை சண்முகா நம்பிக்கை நிறுவனத்தின் சொத்தாக உரிமை கொண்டாட முற்பட்டதன் காரணமாக இருதரப்புக்கும் இடையிலான சர்ச்சை நீதிமன்றம் சென்றது. இறுதியில் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிள்ளையார் கோவில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானதென்பதும் அதனை பராமரிக்கும் உரிமை கோவில் மணியக்காரனின் உரிமை என்பதனையும் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது இதையடுத்து கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் இயற்க்கை நீர் ஊற்றுக்கள் சட்டத்தின் பிரகாரம் மரியம்மன் கோவில் சொந்தம் கொண்டாட முடியாது அதனை அரசு பொறுப்பேற்க்கவேண்டும் என்ற வகையில் அன்றைய ஆட்சியாளருக்கு பெட்டிசன் மூலம் முறைப்பாடு கொடுத்ததை
யடுத்து வெந்நீர் ஊற்றுக்கள் தொடர்பில் இந்துக்களின் உரித்து ரத்துசெய்யப்பட்டு அது அரச உடமையாக மாற்றப்பட்டது.இவ்வாறாக திருக்கோணமலையில் தமிழர்களின் இருப்பை உறுதிசெய்யும் பல அடையாளங்களை அமித்தொழித்த துரோகிக்கும் நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ள காட்டிக்கொடுப்பை திருக்கோணமலையில் மட்டுமே காணக்கிடக்கிறது இத்தகைய துரோகங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க நியாயமில்லை இதன் காரணமாகவே பிழைப்புவாத துரோகக் கும்பல்கள் இன்றும் திருக்கோணமலையில் சுதந்திரமாக தமது காட்டிக் கொடுப்புக்களை செய்து வருகின்றனர்.
இவ்வாறான காட்டிக்கொடுப்புக்களின் தொடர்ச்சியாக இன்று கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் சிறிய கொட்டிலில் குடியிருக்க வேண்டிய அவலத்துக்குள்ளாகியுள்ளார்.
jw;NghJ gps;isahH jq;Fklk;
gioa gps;isahH Nfhtpy;
1983 வரை ப+சை புனருத்தானங்களுடன் காணப்பட்ட பிள்ளையார் கோவில் அதற்குப் பின்னான உள்நாட்டு யுத்த சூழலில் இடிபாடுகள் சூழ்ந்து பராமரிப்பார் அற்று காணப்பட்டது. இப்பிள்ளையார் கோவிலை புனர் நிர்மாணம் செய்வதற்காக பிள்ளையாரை பாலஸ்தானம் செய்து தற்போது இருக்கின்ற சிறு கொட்டிலில் தற்காலிகமாக வைக்கப்பட்டது. பின்னர் கோவில் புனர் நிர்மாணத்திற்காக பழைய கட்டிடத்தை இடித்து துப்பரவு செய்தபோது பிரச்சனை ஆரம்பமாகியது பிள்ளையார் ஆலயம் இருந்த இடம் பெரிய குளம் வில்கம் விகாரைக்குரியது எனவும்.அந்த தடயத்தை அழிக்கவே இந்த கோவில் இருந்த இடம் தரைமட்ட மார்க்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தற்போதைய மாரியம்மான கோவில் மணியக்காரர் மீதாக வில்கம் விகாரை பௌத்த பிக்குவால் பொலிசில் முறைப்பாடு பொடுக்கப்பட்டதை அடுத்து பொலிசார் மாரியம்மன் கோவில் மணியக்காரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து பிள்ளையார் கோவிலுகுரித்தான இடம் சாச்சைக்குட்படுத்தப்பட்டது இந்த வழக்கில் புதை பொருள் ஆராச்சி நிலையத்தினரும் சாட்சியமாக குறிப்பிட்டிருந்தபோதும். இறுதியில் வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் அந்த இடத்தில் பிள்ளையார் கோவில் கட்டும் பணி இன்று வரை தடுக்கப்பட்டுள்ளது இந்த கோவிலை மீளக்கட்டி கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநிறுத்த தற்போதைய மணியக்காரான பெண்மணி விடா முயற்ச்சியுடன் செய்யப்பட்டு வருகின்ற போதும் அவருக்கு பக்கபலமாக ஒத்துழைப்பு வழங்க திருகோணமலை மண்ணில் யாருமற்ற நிலையையே காணக்கூடியதாக உள்ளது தற்போதைய வெந்நீர் ஊற்று வரலாற்று திரிவுபடுத்தலின் படி கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பெரிய குளம் வில்கம் விகாரையுடன் தொடர்பான வரலாற்று பின்னனியை கொண்டுள்ளதாக கூறிக்கொண்டு பிள்ளையார் கோவில் இருந்த இடத்துக்கு அருகில் கண்ணிய வெந்நீர் ஊற்று பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைப்பதற்காக நிதி சேகரிப்பு நிலையம் ஒன்றை வில்கம் விகாரை பௌத்த பிக்கு ஒருவர் நடாத்தி வந்தார். தற்போது வெந்நீர் ஊற்றுப்பகுதியின் பின்பக்கத்தில் ;
tpy;fk; tpfhiuAld; nte;ePCw;Wf;fis ngsj;j tpfhiu epHkhzj;Jf;F njhlHGgLj;Jk; Ntiyj;jpl;lj;jpd; epjp Nrfhpf;Fk; epiyak; milahsk;
அமைந்துள்ள மலை அடிவாரத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக அறியக்கூடியதாக உள்ளது. பௌத்த விகாரை அமைப்பது தவறான செய்கையோ அல்லது விகாரை அமைக்க கூடாதென்பதோ அல்ல இங்கு பிரச்சினை. இன்னமும் பிள்ளையார் கோவிலை புணர்நிர்மானம் செய்ய அனுமதி மறுப்பதேன்? ஏன்பது தான் பிரச்சினை. இதேவேளை வெந்நீர் ஊற்று பகுதியில் சேதமடைந்திருந்த பள்ளிவாசல் புனர்நிர்மானப்பணிகளும் எதுவித இடையூறுகளுமின்றி நடைபெறுகிறது இதிலிருந்து விளங்கிக்கொள்ளக்கூடிய தொன்றுதான் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை முற்றாக மறுதலிக்கும் விதத்திலும் திரிபுபடுத்த வரலாற்றை நிலைநிறுத்தும் நோக்கிலும் கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவிலை இல்லாமல் செய்துவிடும் முயற்ச்சி மேலோங்கி நிற்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.
இன்று திருக்கோணமலையை மையப்படுத்திய தமிழ் அரசியல் கட்சிகளும் அதன் உறுப்பினர்களும் தமிழர் குடியேற்றம் என்ற போர்வையில் இந்து கோவில் நிலங்களையும் பொதுசொத்துக்களை மறைமுகமாக விற்பனை செய்து தமது சொந்த கஜானாக்களை நிரப்புவதில் அக்கறை கொண்டுள்ளார்களே தவிர திருக்கோணமலையில் தமிழர்களின் பாரம்பரிய உரிமைகளையும் வரலாற்று அடையாளங்களையும் பாதுகாத்து தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் நோக்கிலான எந்த செயல்திட்டங்களையும் முன்னெடுப்பதில் அக்கறை கொள்பவர்களாக இல்லை என்பதே உண்மை. கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் பேரினவாதம் முன்னெடுத்து வரும் வரலாற்று திரிபுபடுத்தல்களை சட்டபூர்வமாவதை தடுப்பதற்கான முயற்ச்சிகளை இனியாவது காலதாமதமின்றி மேற்க்கொள்ள தவறின் கன்னியா வெந்நீர் ஊற்றுக்களும் அந்த பிரதேசமும் வில்கம் விகாரையின் ஒரு பகுதியாக பிரகடனப்படுத்துவது நிட்சயம் நடந்தேறும்.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் பேரினவாதத்தின் செயற்திட்டங்கள் ஆர்ப்பாட்டம எதுவுமின்றி அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதேவேளை தமிழர் தாயகத்தின் வரலாற்று உரிமைகளையும் அவற்றின் அடையாளங்களையும் பாதுகாக்கவேண்டிய கடைப்பாடு உடையவர்களும் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து தமது பிரதி நிதிகளாக பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது கடமை பொறுப்புக்களில் இருந்து விலகி வெகு தூரம் நிற்பதையே கன்னியா வெந்நீர்ஊற்று பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணம் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக தடுக்கப்படி;ருக்கும் விவகாரம் வெளிப்படுத்தியுள்ளது கடந்த பாராளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட த.தே.கூட்டமைப்பு தமது 6 வருட பதவிக் காலத்தில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வெந்நீர்ஊற்று விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்தைஈர்க்க முயலாமையானது வேதனைக்குரியதும் வெட்கப்படவேண்டியதும் கண்டனத்துக்குரியதுமான விடயமாகும். பாராளுமன்றத்தின் மூலம் தமழ் மக்களுக்கு நியாயமான தீர்வுஒன்றினை பெறமுடியாதென்றாலும் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான குரல்களும் செல்லாகாசென்பதை இதன் மூலம் முழு உலகுக்கும் வெளிப்படுத்தியிருக்கமுடியும். ஆக ஈழத்தமிழரை பொறுத்தவரை உருப்படியான அரசியல் தலைமைத்துவம் ஒன்று இல்லாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர் என்பதே உண்மை நிலவரமாகும். இந்த நிலைமை உடனடியாக நிவர்த்திசெய்யப்படவேண்டிய விடயமாகும் இவ் இவிடயத்தில் புலம்பெயர் உறவுகளும் உள்நாட்டு புத்திஜீவிகளும் சமூகபற்றாளர்களும் அக்கறையுடன் செயல்படவேண்டிய அவசியத்தை கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் புனர்நிர்மாண விவகாரம் வலியுறுத்தி நிற்கிறது.
No comments:
Post a Comment